அமெரிக்காவால் அச்சுறுத்தல்; சீனா ஆவேச குற்றச்சாட்டு

Added : செப் 14, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
 அமெரிக்காவால் அச்சுறுத்தல்; சீனா ஆவேச குற்றச்சாட்டு

பீஜிங் : 'அமெரிக்காவால், உலக அமைதிக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது' என, சீனா, சரமாரியாக குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளது.

அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில், 'சீன ராணுவம், அண்டை நாடுகளுடன் மோதல் போக்கை பின்பற்றுகிறது.தென் சீன கடல் பகுதி யிலும், ஆசிய பிராந்தியத்திலும் ஆதிக்கம் செலுத்தி, சர்வதேச சமுதாயத்துக்கு ஆபத்தை ஏற்படுத்துகிறது' என, தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கு பதிலடியாக, சீன ராணுவ அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:சர்வதேச சமுதாயத்துக்கும், அமைதிக்கும், அமெரிக்கா தான், பெரும் அச்சுறுத்தலாக விளங்குகிறது. கடந்த கால நிகழ்வுகளை ஆய்வு செய்தால், இது தெரிய வரும். ஆனால், தேவையில்லாமல் சீனா மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை அமெரிக்கா கூறுகிறது. சீன ராணுவம் மேற்கொண்டு வரும் கட்டமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளை, வேறு மாதிரியாக திரித்து, குற்றச்சாட்டுகளை கூறி வருகிறது.

ஈராக், சிரியா, லிபியா போன்ற நாடுகளில் அமெரிக்கா தலையிட்டதால் எந்த மாதிரியான தாக்கம் ஏற்பட்டது என, சர்வதேச சமுதாயத்துக்கு தெரியும். அமெரிக்காவின் இந்த அடாவடியான செயல்களால், எட்டு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி விட்டனர். லட்சக்கணக்கானோர் அகதிகளாகி விட்டனர். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S. Narayanan - Chennai,இந்தியா
15-செப்-202015:21:16 IST Report Abuse
S. Narayanan அமெரிக்கா என்ன உலகமே சீனாவுக்கு எதிராக திரண்டு எழப்போகிறது.
Rate this:
Cancel
Muruga Vel - Mumbai,இந்தியா
15-செப்-202006:00:32 IST Report Abuse
 Muruga Vel சாத்தான் வேதம் ஓதுகிறது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X