தி.மு.க., உட்கட்சி பூசல் நிர்வாகி வெட்டி கொலை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தி.மு.க., உட்கட்சி பூசல் நிர்வாகி வெட்டி கொலை

Added : செப் 14, 2020
Share

திருநெல்வேலி : உட்கட்சி பூசலில், தி.மு.க., மாவட்ட நிர்வாகி வெட்டி கொலை செய்யப்பட்டார்.

திருநெல்வேலி மாவட்டம், தெற்கு வள்ளியூரைச் சேர்ந்தவர், முத்துராமன், 35. தி.மு.க., மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளரான இவர், நேற்று முன்தினம் இரவில், காரில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.அப்போது, சாலையில் இரும்பு பேரலால் ஏற்படுத்தப்பட்ட தடையை அப்புறப்படுத்த இறங்கியபோது, நான்கு பேர் அரிவாளால் வெட்டினர். பலத்த காயமுற்றவர், நாகர்கோவில் அரசு மருத்துவமனைக்கு செல்லும் வழியில் இறந்தார்.பணகுடி போலீசார் விசாரித்தனர்.

முத்துராமனுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு முத்துராமன், 32, என்பவருக்கும், கடந்த ஆண்டு உள்ளூர் கோவில் கொடை விழாவில் பேனர் வைத்ததில் தகராறு, தி.மு.க.,வில் பொறுப்பிற்கு வரவிடாமல் தடுத்தது உள்ளிட்ட முன்விரோதம் இருந்தது தெரிந்து.கொலை தொடர்பாக, முத்துராமன், அவரது நண்பர்கள் மூவரை போலீசார் கைது செய்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X