முன்னாள் அதிபரின் உடலை தோண்டி எடுக்க பேரன் மனு

Added : செப் 14, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
 முன்னாள் அதிபரின் உடலை தோண்டி எடுக்க பேரன் மனு

கொலம்பஸ் : அமெரிக்க முன்னாள் அதிபர் வாரன் ஹார்டிங்கின் உடலை தோண்டி எடுத்து, டி.என்.ஏ., பரிசோதனை செய்யக்கோரி, அவரது பேரன் நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளார்.

அமெரிக்காவின், 29வது அதிபராக இருந்தவர் வாரன் ஹார்டிங். குடியரசு கட்சியை சேர்ந்த இவர், 1923 ஆகஸ்ட், 2ம் தேதி, அதிபர் பதவியில் இருந்தபோது, காலமானார்.அவரது உடல், ஓஹியோ மாகாணத்தின் மரியோன் பகுதியில், நல்லடக்கம் செய்யப்பட்டது.கடந்த, 1920ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று, ஹார்டிங் அதிபரானார். அந்த தேர்தல் நடந்து, வரும் நவம்பருடன், 100 ஆண்டுகள் நிறைவடைய உள்ளன.

இந்த நுாற்றாண்டு விழாவை முன்னிட்டு, ஹார்டிங் பிறந்த மரியோன் பகுதியில், அவருக்கான அருங்காட்சியகம் அமைக்கப்பட்டு வருகிறது.அதில், ஹார்டிங்கின் வாழ்க்கை வரலாறு முழுதும், படங்களாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அவரது மனைவி புளோரன்ஸ் மேபில் ஹார்டிங் குறித்த தகவல்களும், அதில் இடம்பெறுகின்றன. எனினும், ஹார்டிங்கின் காதலியான பிரிட்டோன் குறித்தும், அவர் வாயிலாக பிறந்த மகள் குறித்த, எந்த தகவல்களும் இடம்பெறவில்லை.

இந்நிலையில், ஹார்டிங் - பிரிட்டோனின் பேரன் ஜேம்ஸ் பிளேசிங், ஓஹியோ மாகாண நீதிமன்றத்தில், மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:அமெரிக்காவின், 29வது அதிபர் வாரன் ஹார்டிங்கின் பேரன் நான். அதை அனைவருக்கும் நிரூபிக்க விரும்புகிறேன். ஆகையால், ஹார்டிங்கின் உடலை தோண்டி எடுத்து, டி.என்.ஏ., பரிசோதனை செய்ய வேண்டும். அவரின் பேரனான என்னைப் பற்றியும், என் தாய் எலிசபெத் ஆன் பிளேசிங் மற்றும் என் பாட்டி நான் பிரிட்டோன் குறித்த தகவல்களும் அருங்காட்சியகத்தில் இடம்பெறவேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Muruga Vel - Mumbai,இந்தியா
15-செப்-202005:59:23 IST Report Abuse
 Muruga Vel அங்கியும் இணைவி துணைவி சமாச்சாரம் ..ராயல் அளவுக்கு தைரியம் இல்லாம இறந்துட்டாங்க ..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X