அரசியல் செய்தி

தமிழ்நாடு

மாணவர்கள் தற்கொலைக்கு 'நீட்' காரணமாக இருக்காது

Added : செப் 14, 2020
Share
Advertisement

சாத்துார் : ''மாணவர்கள் தற்கொலைக்கு 'நீட்' தேர்வு மட்டுமே காரணம் என்று சொல்ல முடியாது'' என பா.ஜ. மாநில துணைத்தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார்.

சாத்துாரில் அவர் கூறியதாவது: அரசியல் செய்வதற்கு வேறு காரணம் கிடைக்காததால் எதிர்கட்சிகள் 'நீட்' தேர்வை கையில் எடுத்துள்ளன . 'நீட்' தேர்வை இந்தியாவில் அனைத்து மாநிலங்களும் ஏற்று கொண்டுள்ளது. மாணவர்கள் தற்கொலைக்கு 'நீட்' மட்டுமே காரணம் என்று சொல்ல முடியாது. இந்த தேர்வால் தமிழக மாணவர்கள் பிற மாநிலங்களுக்கு சென்று அங்குள்ள கல்லுாரியில் படிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.'நீட்' தேர்வால் தான் மாணவர்கள் தற்கொலை செய்வதாக தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கூறுவதை தவிர்க்க வேண்டும். இது தமிழகத்தில் பா.ஜ. வெற்றியை பாதிக்காது.

தேர்தல் அறிக்கையும் கூட்டணியும் தான் பா.ஜ. வெற்றியை தீர்மானிக்கும். நடிகர் விஷால் பா.ஜ.வில் இணைந்தால் வரவேற்போம். நடிகர் ரஜினி அரசியல் கட்சி துவங்கினால் அவருடன் கூட்டணி குறித்தும் பரிசீலிப்போம்'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X