சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பு.த., மாஜி செயலர் கொலை 2வது நாளாக போராட்டம்

Added : செப் 14, 2020
Share
Advertisement

ராஜபாளையம் : ராஜபாளையம் அருகே புதிய தமிழகம் கட்சி முன்னாள் மாவட்ட செயலாளர் ராஜாலிங்கம் 52 கொலை வழக்கில் தொடர்புள்ளவர்களை கைதுசெய்யக்கோரி தொடரும் போராட்டத்தால் சங்கரன்கோவில் நெடுஞ்சாலையில் இரண்டாவது நாளாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ராஜபாளையம் அருகே உள்ள முதுகுடியை சேர்ந்த ராஜாலிங்கம் நேற்றுமுன்தினம் அவரது தோட்டத்தில் மர்மநபர்களால் கொலை செய்யப்பட்டார். கொலையாளிகளை கைது செய்யக்கோரி உறவினர்கள் சங்கரன் கோவில் மெயின் ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர். போலீசார் குவிக்கப்பட்டனர்.இவ்வழக்கில் முதுகுடி சந்திரசேகர் ராஜன் மாரிச்செல்வம் பாலமுருகனிடம் விசாரணை நடக்கிறது. முதுகுடியை சேர்ந்த அ.தி.மு.க. முன்னாள் ஒன்றிய செயலாளர் முருகையா பாண்டியன் உள்ளிட்ட 7 பேரை போலீசார் தேடுகிறார்கள்.

இந்நிலையில் குற்றவாளிகளை கைது செய்யக்கோரி நேற்று இரண்டாவது நாளாக போராட்டம் நடந்தது. ராஜாலிங்கம் உடல் பிரேத பரிசோதனை முடிந்து மதுரை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X