பொது செய்தி

தமிழ்நாடு

கோவையில் இதுவரை 18,300 பேர் நலம்: ஒரே நாளில் 554 பேர் 'டிஸ்சார்ஜ்'

Added : செப் 14, 2020
Share
Advertisement

கோவை:கோவையில் நேற்று கொரோனா தொற்றுக்குள்ளான, 554 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.கோவை அரசு மருத்துவமனை ஆண் மருத்துவப் பணியாளர், பி.ஆர்.எஸ்., காவலர் குடியிருப்பை சேர்ந்த இரு காவலர்கள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த, 490 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதியானது.
பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை, 22 ஆயிரத்து, 156 ஆக உயர்ந்தது. நான்கு பேர் சிகிச்சைப் பலனின்றி நேற்று உயிரிழந்தனர். பலியானோர் எண்ணிக்கை, 353 ஆக உயர்ந்தது.கோவையில் பல்வேறு மருத்துவ மையங்களில் சிகிச்சைப் பெற்று வந்த, 554 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை, 18 ஆயிரத்து, 308 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது, 3,495 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
எஸ்.பி.,க்கு கொரோனா:
கோவை ரூரல் எஸ்.பி., அருளரசுக்கு, கடந்த இரண்டு நாள்களாக காய்ச்சல், சளி உள்ளிட்ட அறிகுறி இருந்ததால் அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்தார். அவருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று உறுதியானது. குறைந்த அளவிலான அறிகுறி மட்டும் இருந்ததால், அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
கோவை போத்தனூர் போலீஸ் ஸ்டேஷனில், வெள்ளலூரை சேர்ந்த, 43 வயது ஆண் ஏட்டுக்கும் தொற்று உறுதியானது. வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டார். போத்தனூர் போலீஸ் ஸ்டேஷனில், இதுவரை எட்டு பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.சுகாதாரத் துறை அதிகாரிக்கு தொற்று: கோவை மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குனர் ரமேஷ்குமாருக்கு, கொரோனா அறிகுறியை தொடர்ந்து பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனையில் அவருக்கு தொற்று உறுதியானது. இதையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X