சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அமைச்சர் முன்னிலையில் அடிதடி; சேர்கள் உடைப்பு

Updated : செப் 14, 2020 | Added : செப் 14, 2020 | கருத்துகள் (24)
Share
Advertisement
ADMK, அமைச்சர், அடிதடி, சேர்கள், உடைப்பு

திருச்சி : அமைச்சர், மாவட்ட செயலர் முன்னிலையில் அ.தி.மு.க. இளைஞர் பாசறை ஆலோசனைக் கூட்டத்தில் கட்சியினர் மீது தாக்குதல் நடத்தி சேர்கள் உடைக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை ஆலோசனை கூட்டம் நேற்று காலை ஸ்ரீரங்கம் தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை மாநிலச் செயலர் பரமசிவம், மாவட்ட செயலர் பரஞ்ஜோதி, அமைச்சர் வளர்மதி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


latest tamil news


கூட்டம் துவங்கிய சில நிமிடங்களில் மண்டபத்திற்குள் முத்தரையர் சமுதாய கொடியுடன் 30 பேர் புகுந்தனர். 'சரியான நபர்களுக்கு பதவி வழங்கவில்லை. காசுக்காக பதவியை வித்துட்டீங்களே' எனக் கூறி வாக்குவாதம் செய்ததோடு திடீரென அங்கிருந்த சேர்களை எடுத்து கட்சியினரை தாக்கினர். இதனால் கூட்டத்தில் இருந்த நிர்வாகிகள் கட்சியினர் சிதறி ஓடினர்.

தொடர்ந்து மேடையை நோக்கி வந்த கும்பல் அங்கிருந்த சிலரை குறி வைத்து அடித்தது. இதைப் பார்த்து அமைச்சர் வளர்மதியும், பரஞ்ஜோதியும் சேர்களுக்கு பின் ஒளிந்து கொண்டனர். பின் அவர்கள் போலீஸ் பாதுகாப்புடன் பத்திரமாக அழைத்து செல்லப்பட்டனர்.


latest tamil news



திருச்சி புறநகர் மீனவர் அணிச் செயலர் கண்ணதாசன் அந்தநல்லுார் ஒன்றிய செயலர் பதவியை எதிர்பார்த்தார். அந்த பதவி கிடைக்காத ஆத்திரத்தில் அவரது ஆதரவாளர்கள் தான் தாக்குதல் மற்றும் தகராறில் ஈடுபட்டனர் என அ.தி.மு.க.வினர் மத்தியில் பேசப்படுகிறது. ஸ்ரீரங்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.P. Barucha - Pune,இந்தியா
15-செப்-202011:44:36 IST Report Abuse
S.P. Barucha இனி ஆம்புலேன்ஸையும், தீயணைப்பு வாகனம், போலீஸ் ஒவ்வோரு கட்சி கூட்டத்திலேயும் நிறுத்த வேண்டும்.மக்கள் எக்கேத்தி போனால் என்ன ?
Rate this:
Cancel
S. Narayanan - Chennai,இந்தியா
14-செப்-202019:27:51 IST Report Abuse
S. Narayanan அடிதடி நடந்ததால் இனி கூட்டம் போடவேண்டாம் என்று சொல்வார்களா.
Rate this:
Cancel
vnatarajan - chennai,இந்தியா
14-செப்-202017:32:49 IST Report Abuse
vnatarajan தனியார் மற்றும் பொது சொத்தை சேதப்படுத்துவது என்பது தற்போதுள்ள அரசியல்வாதிகலில் சிலர் அந்த செயல்களை தனக்குள்ளே உள்ள ஒரு வீரமாக நினைக்கிறார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X