பொது செய்தி

இந்தியா

வீட்டுக்கடன் வட்டி குறைப்பு விவகாரம்; வங்கிகள் நடவடிக்கை எடுக்குமா?

Updated : செப் 14, 2020 | Added : செப் 14, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
புதுடில்லி: ரிசர்வ் வங்கியின் நடவடிக்கையால் வீட்டு கடனுக்கான வட்டி குறைந்துள்ளபோதும் பெரும்பாலான வங்கிகள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு வட்டி விகிதத்தை குறைப்பதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.சமீபகாலமாக பொருளாதாரத்தை மீட்டு எடுக்கும் நோக்கத்திலும் பொதுமக்கள் நலன் கருதியும் வங்கிகளுக்கான 'ரெப்போ' வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி குறைத்து வருகிறது.இதன்
HomeLoan, Banks, வீட்டுக்கடன், வங்கிகள், வட்டி

புதுடில்லி: ரிசர்வ் வங்கியின் நடவடிக்கையால் வீட்டு கடனுக்கான வட்டி குறைந்துள்ளபோதும் பெரும்பாலான வங்கிகள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு வட்டி விகிதத்தை குறைப்பதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.

சமீபகாலமாக பொருளாதாரத்தை மீட்டு எடுக்கும் நோக்கத்திலும் பொதுமக்கள் நலன் கருதியும் வங்கிகளுக்கான 'ரெப்போ' வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி குறைத்து வருகிறது.இதன் எதிரொலியாக வீட்டு கடன் உள்ளிட்ட கடன்களுக்கான வட்டி விகிதம் குறைந்துள்ளது. தற்போதைய கொரோனா வைரஸ் தொற்று நெருக்கடியை கருத்தில் கொண்டு வீட்டு கடனுக்கான வட்டி 6.95 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. வங்கியின் வைப்புத் தொகை கடன் மற்றும் செலவுகள் அடிப்படையில் குறைக்கப்பட்ட வட்டி விகிதம் ஒவ்வொரு வங்கிக்கும் மாறுபடும்.

இருந்தபோதும் இந்த வட்டி குறைப்பை கடன் பெற்றுள்ள தங்களது வாடிக்கையாளர்களை அழைத்து முறைப்படி பெரும்பாலான வங்கிகள் தெரிவிப்பதில்லை. இதனால் வாடிக்கையாளர் பல ஆண்டுகளுக்கு முன் கடன் பெற்றபோது எத்தனை சதவீதம் வட்டி நிர்ணயிக்கப்பட்டதோ அதையே தொடர்ந்து வசூலிக்கும் கொடுமை அரங்கேறி வருகிறது. குறிப்பிட்ட வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே வட்டி குறைப்பு என்பது தானாக அமலுக்கு வருகிறது. மற்ற பிரிவுகளில் உள்ளவர்களுக்கு வட்டி குறைக்கப்படுவதில்லை; தகவலும் தெரிவிக்கப்படுவதில்லை. கடிதம் அல்லது அதற்குரிய விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தருகின்ற வாடிக்கையாளர்களுக்கு மட்டும் வட்டி குறைக்கப்படுகிறது.


latest tamil news


கடிதமோ விண்ணப்பமோ தராத வாடிக்கையாளர்களுக்கு பழைய வட்டி விகிதத்திலேயே மாதாந்திர தவணைத் தொகை வசூலிக்கப்படுகிறது.இதுகுறித்து வங்கிகள் வட்டாரத்தில் கேட்டபோது 'வீட்டு கடன் வட்டி குறைப்பு தொடர்பாக வெளிப்படையாக அறிவிப்பு வெளியிடப்படுகிறது. இதுகுறித்த விபரங்கள் இணையதளங்களில் உள்ளது.எனவே வாடிக்கையாளர்களை அழைத்து நேரடியாக சொல்ல வேண்டிய அவசியம் எழவில்லை. வாடிக்கையாளர்கள் கடிதமோ விண்ணப்பமோ அளித்தால் வட்டி விகிதம் குறைத்து கணக்கிடப்படும்' என தெரிவித்தனர். வாடிக்கையாளர்கள் அனைவரின் அலைபேசி எண், இ மெயில் முகவரி, ஆதார் உள்ளிட்ட விபரங்கள் வங்கிகளிடம் உள்ளன. இதை பயன்படுத்தி வட்டி குறையும்போது தகவல் தெரிவிப்பதற்கும் வங்கிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


வட்டி குறைப்பிற்கு வங்கியை அணுகலாம்


latest tamil news


வங்கியில் கடன் பெற்று தவணைத் தொகையை செலுத்தி கொண்டிருப்பவர்கள், ஏற்கனவே இருந்த வட்டி விகிதம் எவ்வளவு, தற்போது உள்ள வட்டி விகிதம் எவ்வளவு, எத்தனை சதவீதம் குறைத்துள்ளனர், செலுத்தும் தவணைத் தொகை போன்ற விபரங்களை தெரிந்து கொள்ள வேண்டும். பின், வட்டி குறைப்புக்கு, தாங்கள் கடன் பெற்ற வங்கிக்கு நேரில் சென்று விண்ணப்பித்து பயன்பெறலாம்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Darmavan - Chennai,இந்தியா
14-செப்-202008:09:17 IST Report Abuse
Darmavan வட்டி உயரும்போது வாடிக்கையாளர் தெரிவித்தால் தான் ஏற்றுகிரங்களா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X