நீதிமன்றத்தை அவமதித்து பேசியதாக சூர்யா மீது நடவடிக்கை கோரி நீதிபதி கடிதம்

Updated : செப் 14, 2020 | Added : செப் 14, 2020 | கருத்துகள் (134) | |
Advertisement
சென்னை: நீட் தேர்வுக் குறித்து கருத்து தெரிவித்த நடிகர் சூர்யா, ‛உயிருக்கு பயந்து வீடியோ கான்பிரன்ஸிங் மூலம் நீதி வழங்கும் நீதிமன்றம், மாணவர்களை அச்சமில்லாமல் போய் தேர்வு எழுத வேண்டும் என்று உத்தரவிடுகிறது' என கூறியிருந்தார். இந்நிலையில் நீதிமன்றத்தை அவமதித்து பேசியதாக சூர்யா மீது நடவடிக்கை எடுக்க கோரி நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு
ActorSurya, Court, NEET, நடிகர், சூர்யா, நீட் தேர்வு, நீதிமன்ற அவமதிப்பு, நீதிபதி, கடிதம்

சென்னை: நீட் தேர்வுக் குறித்து கருத்து தெரிவித்த நடிகர் சூர்யா, ‛உயிருக்கு பயந்து வீடியோ கான்பிரன்ஸிங் மூலம் நீதி வழங்கும் நீதிமன்றம், மாணவர்களை அச்சமில்லாமல் போய் தேர்வு எழுத வேண்டும் என்று உத்தரவிடுகிறது' என கூறியிருந்தார். இந்நிலையில் நீதிமன்றத்தை அவமதித்து பேசியதாக சூர்யா மீது நடவடிக்கை எடுக்க கோரி நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு கடிதம் எழுதியுள்ளார்.

நாடு முழுவதும் நேற்று (செப்.,13) நீட் தேர்வு நடைபெற்றது. தேர்வு அச்சம் காரணமாக தேர்வுக்கு முந்தைய நாளில் தமிழகத்தில் 3 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர். இதனால் எழுந்த பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில், நீட் தேர்வு நடந்து முடிந்தது. இந்நிலையில், நீட் தேர்வு குறித்து நடிகர் சூர்யா வெளியிட்ட அறிக்கையில், ‛நம் பிள்ளைகளின் தகுதியையும், திறனையும் வெறும் தேர்வுகள் தீர்மானிக்க அனுமதிக்கக்கூடாது, இனி பெற்றோர்களும், ஆசிரியர்களும் விழிப்புடன் இருக்க வேண்டும்' எனவும், ‛கொரோனா அச்சத்தால் உயிருக்கு பயந்து வீடியோ கான்பிரன்ஸிங் மூலம் நீதி வழங்கும் நீதிமன்றம், மாணவர்களை அச்சமில்லாமல் போய் தேர்வு எழுத வேண்டும் என்று உத்தரவிடுகிறது' எனவும் குறிப்பிட்டிருந்தார்.


latest tamil newsஇந்த நிலையில், நீதிமன்றத்தின் செயல்பாட்டை விமர்சித்து அறிக்கை வெளியிட்ட நடிகர் சூர்யா மீது சென்னை உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டுமென்று கோரி நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், தலைமை நீதிபதி அம்ரேஷ்வர் பிரதாப் சாஹிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், ‛என்னுடைய கருத்துப்படி, அந்த அறிக்கையானது நீதிபதிகளின் ஒருமைப்பாடு மற்றும் ஈடுபாட்டையும், நமது நாட்டின் நீதிமன்ற கட்டமைப்பையும் குறைமதிப்புக்கு உட்படுத்தும் வகையில் மட்டுமின்றி அதை தவறான முறையில் விமர்சித்துள்ளதால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடரலாம். மேலும், இதனால் நீதித்துறை மீதான மக்களின் நம்பிக்கைக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது,' இவ்வாறு கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (134)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raghavan - chennai,இந்தியா
16-செப்-202012:52:33 IST Report Abuse
Raghavan பெரும்பாலான மாநிலங்கள் நவோதய பள்ளிகளை திறந்துள்ளன. ஏன் தமிழ் நாட்டில் மட்டும் நவோதய பள்ளிகளை திறக்கவில்லை. இரண்டு திராவிட கட்சியில் உள்ளவர்களும் சி பி ஸ் சி பள்ளிகளை நடத்துகின்றார்கள். இவர்கள் இருக்கும் வரை நவோதய பள்ளிகள் இங்கு வருவதற்கு வாய்ப்பேயில்லை. முதலில் சூர்யா போன்ற நடிகர்கள் நவோதய பள்ளிகளை இங்கு திறக்க போராட வேண்டும். நவோதய பள்ளிகளில் படித்த மாணவர்கள் பெரும்பாலோர் நீட் தேர்வில் முதலிடம் வந்துள்ளார்கள்.
Rate this:
Cancel
Appan - London,யுனைடெட் கிங்டம்
16-செப்-202010:25:27 IST Report Abuse
Appan சூரிய சொன்னதில் என்ன தப்பு..?.எச்சில் கையில் விலங்குகளை துரத்த தயங்குகிறவர்களின் சொல்லை பெரிதா எடுத்துக்குனுமா..? சிலர் ஏன் எச்சில் கையில் விலங்குகளை துரத்த பயப்படுகிறார்கள் தெரியுமா..? கையில் ஒட்டி உள்ள சோறு கூட விலங்குக்கு போய்விட கூடாது என்று வாழ்பவர்கள்..அவ்வளவு சுயநலம்..தமிழகத்தில் அகரம் போல் எந்த அமைப்பாவது உள்ளதா..?.. இவர் சொல்வதை சிந்திக்கணும்..அதை விட்டு அவரின் மேல் கேஸ் போடுவது, நையாண்டி செய்வது நல்லதிற்கு காலம் இல்லை என்று சொல்வது போல் ஆகும்..?..
Rate this:
Cancel
Priyan Vadanad - Madurai,இந்தியா
14-செப்-202019:54:13 IST Report Abuse
Priyan Vadanad இந்த வழக்கும் வீடியோ கான்பரன்சிங்கில்தான் நடக்கத்தேவைப்படும் என்பதால் இந்த புகார் தள்ளுபடி செய்யப்படலாம். அல்லது சூர்யா தனது கருத்தை திரும்ப பெற வலியுறுத்தப்படலாம். எப்படியோ ஒரு நீதிபதிக்கு சுட்டுவிட்டது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X