பொது செய்தி

தமிழ்நாடு

பிரதமர் கிசான் திட்டத்தில் விதிமீறி 7,000 பேர் சேர்ப்பு: பா.ஜ., புகார்

Added : செப் 14, 2020
Share
Advertisement

ஈரோடு: பிரதம மந்திரி கிசான் சம்மான் யோஜ்னா திட்டத்தில், ஈரோடு மாவட்டத்தில், 7,000 பேர், விதிமீறி சேர்க்கப்பட்டுள்ளதாக, பா.ஜ., செயற்குழுவில் புகார் தெரிவிக்கப்பட்டது.
ஈரோடு தெற்கு மாவட்ட, பா.ஜ., செயற்குழு கூட்டம் ஈரோட்டில் நடந்தது. மாவட்ட தலைவர் சிவசுப்பிரமணியன் தலைமை வகித்தார். பிரதம மந்திரி கிசான் சம்மான் யோஜ்னா திட்டத்தில், தமிழகத்தில், 110 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி நடந்துள்ளது. ஈரோட்டில் விதிமீறி, 7,000 பேர் சேர்க்கப்பட்டது விசாரணையில் தெரிய வந்தாலும், 550 கணக்குகள் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. போலியாக, 7,000 பேர் வரை, இத்திட்டத்தில் சேர்க்க உதவி புரிந்த, தனியார் கணினி நிறுவனங்கள் மீது, எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து தெரிவிக்க வேண்டும். கூட்டு கொள்ளையில் ஈடுபட்ட வங்கி அதிகாரிகள், வேளாண் அலுவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதேசமயம் மோசடியில் ஈடுபட்ட தமிழக அதிகாரிகளை காப்பாற்றும் விதமாக, மத்திய அரசின் மீது பழி போடும் தமிழக முதல்வருக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X