வ.உ.சி., விளையாட்டரங்கம் இன்று முதல் மீண்டும் திறப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வ.உ.சி., விளையாட்டரங்கம் இன்று முதல் மீண்டும் திறப்பு

Added : செப் 14, 2020
Share

ஈரோடு: ஈரோடு வ.உ.சி., விளையாட்டரங்கை, இன்று முதல் பயன்படுத்திக் கொள்ளலாம்,


இதுகுறித்து மாவட்ட விளையாட்டு அலுவலர் சதீஷ்குமார், வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கொரோனா ஊரடங்கால், கடந்த மார்ச், 23 முதல் ஈரோடு வ.உ.சி., பூங்கா விளையாட்டரங்கம் மூடப்பட்டது. தற்போது தளர்வு அளிக்கப்பட்டு, சில கட்டுப்பாடுகளுடன், பயிற்சி எடுத்துக்கொள்ள இன்று (செப்.,14) முதல் திறக்கப்படுகிறது. பயிற்சிக்கு வருவோர் கிருமி நாசினியில் கைகளை கழுவுவது, உடல் வெப்ப பரிசோதனை செய்வது, முக கவசம் அணிந்திருப்பது அவசியம். 100 பேர் மட்டுமே சமூக இடைவெளியுடன், பயிற்சி எடுக்க வேண்டும். பயிற்சியாளர்கள் தங்களுக்கு தேவையான தண்ணீரை, தாங்களே கொண்டு வர வேண்டும். கூட்டம் அதிகமாக இருந்தால் பகுதியாக பிரித்து தனித்தனியாக பயிற்சி எடுக்க வேண்டும். மைதானத்தில் சிற்றுண்டி விற்கவோ, வாங்கவோ கூடாது. 65 வயதுக்கு மேற்பட்டவர்கள், 15 வயதுக்கு உட்பட்டோர் மற்றும் பார்வையாளர்களுக்கு அனுமதியில்லை. விபரங்களுக்கு, 74017-03490, 0424-2223157 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X