பொது செய்தி

தமிழ்நாடு

பா.ஜ., செயற்குழு கூட்டத்தில் கொரோனா விதிமுறை மாயம்

Added : செப் 14, 2020
Share
Advertisement

ஈரோடு: கொரோனா வைரஸ் பரவல், அதிகரித்து வரும் நிலையில், பா.ஜ., செயற்குழு கூட்டத்தில், தொற்று தடுப்பு விதிமுறை, காற்றில் பறக்க விடப்பட்டது, மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெற்கு மாவட்ட பா.ஜ., சார்பில், ஈரோடு மாவட்ட பா.ஜ., செயற்குழு கூட்டம், ஈரோட்டில் நேற்று நடந்தது. இதில், 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதுபோன்ற கூட்டங்களில், கொரோனா விதிகளை கட்டாயமாக பின்பற்ற, அரசு வலியுறுத்தியுள்ளது. ஆனால், பெரும்பாலானோர் முக கவசம் அணியவில்லை. சானிடைசர் பயன்பாடு, தெர்மல் ஸ்கேனர் பரிசோதனையும் செய்யவில்லை. இதேபோல் மாற்று கட்சியினர், 200க்கும் மேற்பட்டோர், மாநில தலைவர் முருகன் முன்னிலையில், பா.ஜ.,வில் இணைந்தனர். அப்போதும் கொரோனா தடுப்பு நடவடிக்கையான சமூக இடைவெளி மறந்து, ஓரிடத்தில் கூடினர். இந்நிகழ்ச்சிக்கு முன்னதாக, நிருபர்கள் சந்திப்பு நடக்கும் என்றனர். ஆனால், நிருபர் சந்திப்பு பகுதியில், கட்சியினர் குவிந்ததால், அந்நிகழ்ச்சி முடிந்தவுடன், சந்திப்பு நடக்கும் என்று கூறினர். ஆனால், இணைப்பு விழா முடிந்ததும், மாநில தலைவர் முருகன், காரில் ஏறி கோவைக்கு கிளம்பி விட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X