பொது செய்தி

தமிழ்நாடு

எம்.எல்.ஏ.,வை கண்டித்து போஸ்டர்; 4 பேர் மீது வழக்கு

Added : செப் 14, 2020
Share
Advertisement

மொடக்குறிச்சி: மொடக்குறிச்சி அருகே, வடுகப்பட்டியில், மஞ்சள் சிறப்பு மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள், எம்.எல்.ஏ., சிவசுப்பிரமணியை கண்டித்து, ஈரோடு, கோபி, அரச்சலூர் உள்ளிட்ட பல இடங்களில் போஸ்டர் ஒட்டினர். இந்நிலையில் அரச்சலூர் அருகே வெங்கமேடு பஸ் நிறுத்தம் அருகில், நேற்று முன்தினம், போஸ்டர் ஒட்டிய, ஈரோடு, சூரம்பட்டி வலசு, எம்.ஜி.ஆர்., நகரை சேர்ந்த விக்னேஷ், 24, ஸ்டோனி பிரிட்ஜ் பகுதியை சேர்ந்த கமலக்கண்ணன், 20, எலவநத்தம் அழகாபுரியை சேர்ந்த ஐயப்பன், உதயபுரத்தை சேர்ந்த சரவணன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். அவர்களிடம், 50 போஸ்டர்கள், ஒரு டூவீலரையும் பறிமுதல் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X