சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வன ஜீப் டிரைவரை தாக்கி கொள்ளையடித்த 9 பேர் கைது

Added : செப் 14, 2020
Share
Advertisement

சத்தியமங்கலம்: சத்தி அருகே, வீடு புகுந்து வனத்துறை ஊழியரை தாக்கி, கொள்ளையடித்த ஒன்பது பேரை, தனிப்படை போலீசார் கைது செய்தனர்.


ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே, அரியப்பம்பாளையம், செங்குந்தர் நகரை சேர்ந்தவர் சஜீவன், 40; சத்தி வனத்துறை அலுவலக ஜீப் டிரைவர். இவரது வீட்டுக்குள் கடந்த, 8ல், கையுறை, முகமூடி அணிந்த கும்பல் புகுந்தது. குடும்பத்தினரை கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கி, 13 பவுன் நகை, 70 ஆயிரம் ரூபாயை கொள்ளையடித்து சென்றனர். கும்பலை பிடிக்க, ஐந்து தனிப்படை அமைக்கப்பட்டது. இந்நிலையில், சத்தி, வடக்குப்பேட்டையை சேர்ந்த பிரகாஷ், 25; ரங்கசமுத்திரம் தவேந்திரன், 18; திம்மையன்புதூர் தனுஷ், 19; ரங்க சமுத்திரம் சவுடேஸ்வரன், 19; நேருநகர் அருள்தாஸ், 19; அரியப்பம்பாளையம் புவனேஸ்வரன், 19; நேருநகர் ஸ்ரீ நாத், 19; திம்மையன்புதூர் மகேந்திரன், 48; வரதம்பாளையம் முத்து, 34, என ஒன்பது பேரை, தனிப்படை போலீசார் நேற்று கைது செய்தனர். விசாரணையில், பிரகாஷ் தலைமையில், கூட்டு கொள்ளையில் ஈடுபட்டது தெரிந்தது. கும்பலிடம் இருந்து, அரிவாள், கத்தி, மூன்று டூவீலர்கள், நகை மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. ஒன்பது பேரையும், கோபி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கொரோனா பரிசோதனைக்கு பின், கோபி மாவட்ட சிறையில் நேற்றிரவு அடைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X