சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மனைவி பிரிந்த வேதனை; விஷம் குடித்த கணவர் சாவு

Added : செப் 14, 2020
Share
Advertisement

ஈரோடு: ஈரோட்டில், மனைவி பிரிந்த வேதனையில், விஷம் குடித்த கணவர் இறந்தார். ஈரோடு, மரப்பாலம், ஜீவானந்தம் சாலை, குயவன்திட்டு பகுதியை சேர்ந்தவர் சக்திகுமார், 40; ஈரோடு மாவட்ட காவல் அலுவலக, தற்காலிக தூய்மை காவலர். கருத்து வேறுபாட்டால், நான்கு மாதங்களுக்கு முன், இவரிடம் இருந்து மனைவி பிரிந்து சென்று விட்டார். இதனால் துயரத்தில் இருந்த சக்திகுமார், சோகத்துடன் காணப்பட்டார். நேற்று முன் தினம் காலை, விஷம் குடித்து விட்டார். மயங்கி கிடந்தவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு, ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், அவர் இறந்தார். ஈரோடு டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X