சம்பவம் செய்தி

தமிழ்நாடு

3 திருமணம் செய்து காதலனுடன் ஓடிய பெண் மீட்பு; ஒன்பது மாத வாழ்க்கை முடிவுக்கு வந்தது

Added : செப் 14, 2020
Share
Advertisement

சென்னிமலை: பெருந்துறை அருகே, மூன்றாவது திருமணம் செய்து, கணவனுடன் வசித்த பெண், கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்தார். ஒன்பது மாதத்துக்குப் பின், வில்லங்க ஜோடியை போலீசார் பிடித்தனர்.


பெருந்துறை அருகேயுள்ள ஆயிக்கவுண்டன்பாளையத்தை சேர்ந்தவர் சுரேஷ், 34; திருப்பூரில் பனியன் கம்பெனியில் வேலை செய்கிறார். இவரின் மனைவி சத்யா, 25; இவர்களுக்கு நான்கு வயதில் மகள் உள்ளார். சத்யாவுக்கு ஏற்கனவே இரு திருமணமாகி, கணவர்களை பிரிந்த நிலையில், மூன்றாவதாக சுரேசை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்தார். இந்நிலையில் கடந்த ஆண்டு, டிச.,17ம் தேதி மகளுடன் சத்யா மாயமானார். சுரேஷ் புகாரின்படி, பெருந்துறை போலீசார் தேடி வந்தனர். அதேசமயம் அந்த பகுதியை சேர்ந்த, விசைத்தறி தொழிலாளி குமார், 28, மனைவி திலகா, தனது கணவரை காணவில்லை என்று, பெருந்துறை போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் விசாரணையில், கள்ளக்காதலால் சத்யா, குமார் ஓட்டம் பிடித்தது தெரிய வந்தது. வில்லங்க 'ஜோடியை' பிடிக்க தனிப்படை அமைத்தனர். இந்நிலையில் கர்நாடக மாநிலம், கொள்ளேகால் பகுதியில் வசித்து வந்த இருவரையும், நேற்று முன்தினம் மீட்டு வந்தனர். சத்யாவின் தந்தை, கணவர் சுரேஷ், குமாரின் மனைவி திலகா, உறவினர்களை அழைத்து, போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். தவறை உணர்ந்த 'ஜோடி' பிரிந்து விடுவதாக, போலீசில் தெரிவித்தனர். சத்யாவை அவரது தந்தையுடனும், குமாரை மனைவி திலகாவுடனும் போலீசார் அனுப்பி வைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X