பொது செய்தி

தமிழ்நாடு

'நீட்' தேர்வை ரத்து செய்யக்கோரி அரசியல் கட்சிகள் ஆர்ப்பாட்டம்

Added : செப் 14, 2020
Share
Advertisement

தர்மபுரி: 'நீட்' தேர்வை ரத்து செய்யக்கோரி, தி.மு.க., - இ.கம்யூ., உள்ளிட்ட அரசியல் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


'நீட்' தேர்வு எழுதவிருந்த மாணவர் ஆதித்யா நேற்று முன்தினம் தற்கொலை செய்து கொண்டார். அவரின் சாவுக்கு காரணமான, 'நீட்' தேர்வை ரத்து செய்யக்கோரி, தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முன், தி.மு.க., சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளரும், எம்.எல்.ஏ.,வுமான தடங்கம் சுப்பிரமணி தலைமை வகித்தார். இதில், தமிழகத்தில் மாணவர்களின் உயிரை காவு வாங்கும், 'நீட்' தேர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். கிராம புற மாணவர்களின் மருத்துவர் கனவை கலைக்கும், 'நீட்' தேர்வை மத்திய அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என, வலியுறுத்தப்பட்டது. மேலும், இதற்கு காரணமான மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷம் எழுப்பப்பட்டது. இதில், பென்னாகரம், எம்.எல்.ஏ., இன்பசேகரன், துணை செயலாளர் சுப்பிரமணி, பொருளாளர் தர்மசெல்வன், முன்னாள் எம்.பி., தாமரைச்செல்வன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதே கோரிக்கை வலியுறுத்தி, இ.கம்யூ., வி.சி., இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் ஆகியவற்றின் சார்பிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X