பொது செய்தி

தமிழ்நாடு

குடற்புழு நீக்க மாத்திரை: இன்று முகாம் துவக்கம்

Added : செப் 14, 2020
Share
Advertisement

தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில், தேசிய குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் சிறப்பு முகாம், இன்று துவங்கி, 28 வரை நடக்கிறது என, கலெக்டர் மலர்விழி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறையின் சார்பில், தேசிய குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் திட்டத்தில், குழந்தைகளுக்கு, குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் சிறப்பு முகாம் இன்று (14ல்) துவங்கி, 28 வரை நடக்கிறது. இம்முகாம்களில், ஒரு வயது முதல், 19 வயது வரை சுமார், ஐந்து லட்சம் பேருக்கு, குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட உள்ளது. குடற்புழு தொற்றினால் ஊட்டச்சத்து குறைபாடு, சோர்வு, உடல் வளர்ச்சி குறைபாடு, படிப்பில் கவனமின்மை, பசியின்மை, ரத்த சோகை, வாந்தி ஆகியவை ஏற்படும். இந்த தொற்றில் இருந்து விடுபட அல்பென்டசோல் மாத்திரைகளை உட்கொள்வது அவசியமாகும். அதன்படி மாவட்டத்தில் உள்ள, அனைத்து துணை சுகாதார நிலையங்கள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் இம்முகாம்களை நடத்த, சுகாதாரத்துறை ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்துறை ஏற்பாடுகள் செய்துள்ளனர். பொதுமக்கள் முகாம்களில் பங்கேற்று, குடற்புழு நீக்க மாத்திரை பெறலாம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X