சேதமான சாலையால் வாகன ஓட்டிகள் அவதி

Added : செப் 14, 2020
Share
Advertisement

தர்மபுரி: சேதமான சாலை சீரமைக்கப்படாமல் உள்ளதால், அமுதம் காலனி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். தர்மபுரி நகராட்சிக்கு உட்பட்டது அமுதம் காலனி. இங்கு, 500க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இப்பகுதி மக்கள் மற்றும் அதை ஒட்டியுள்ள இந்திரா நகர், மருத்துவக்கல்லூரி மருத்துவமனை குடியிருப்பு பகுதிகளில் வசிப்போர், தர்மபுரி சாலைக்கு எளிதில் வரும் வகையில், நீண்டகால போராட்டத்துக்கு பின், தார்ச்சாலை அமைக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன், ஒரு தனியார் தொலைபேசி நிறுவனத்தினர், இச்சாலையை தோண்டி ஒயர் பதித்தனர். அதைத்தொடர்ந்து, இச்சாலையை சீரமைக்க அந்த தனியார் நிறுவனம் மற்றும் தர்மபுரி நகராட்சி நிர்வாகத்தினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கடந்த சில தினங்களாக, பெய்து வரும் தொடர் மழையால், இச்சாலை தற்போது, மேலும் சேதமடைந்துள்ளது. இதனால், இந்த வழியாக வந்து செல்லும் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருவதுடன், இரவு நேரங்களில் விபத்தில் சிக்குகின்றனர். இதை தடுக்க, சேதமான அமுதம் காலனி சாலையை, நகராட்சி நிர்வாகம் விரைந்து சீரைமக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இப்பகுதியினர் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X