பொது செய்தி

தமிழ்நாடு

அத்திப்பள்ளி வரை மெட்ரோ ரயில் சேவை: பா.ஜ., செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்

Added : செப் 14, 2020
Share
Advertisement

ஓசூர்: கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட, பா.ஜ., கட்சி செயற்குழு கூட்டம், ஓசூரில் நேற்று நடந்தது. மேற்கு மாவட்ட தலைவர் நாகராஜ் தலைமை வகித்தார். மாநில செயலாளர் கார்த்தியாயினி, மாநில செயற்குழு உறுப்பினர் ஹரி கோடீஸ்வரன் பேசினர். கூட்டத்தில், ஓசூர் தேர்ப்பேட்டை பச்சை குளத்தின் ராஜகால்வாய் ஆக்கிரமிப்பை அகற்றி, தூர்வாரி புதுப்பிக்க வேண்டும். தேன்கனிக்கோட்டை தாலுகாவில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்க வேண்டும். வன கிராமங்களை ஒட்டிய வனப்பகுதியில், சோலார்வேலி அமைத்து, யானைகள் வெளியே வருவதை தடுக்க வேண்டும். தென்பெண்ணை ஆற்று நீரை, கெலமங்கலம், உத்தனப்பள்ளி பகுதியில் உள்ள ஏரிகளில் நிரப்பி, சின்னட்டியில் உள்ள சனத்குமார் ஆற்றுடன் இணைக்க வேண்டும். ஓசூர் பகுதி தொழிலாளர்கள் மற்றும் மக்கள் பயனடையும் வகையில், கர்நாடகா மாநில எல்லையான அத்திப்பள்ளி வரை, மெட்ரோ ரயில் திட்டத்தை நீட்டிக்க வேண்டும். சூளகிரியில் மின்மயானம் அமைக்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், நிர்வாகிகள் சீனிவாசலு, சுசில் மனோகர், முருகன், பிரவீன்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X