பொது செய்தி

தமிழ்நாடு

108 ஆம்புலன்ஸ் சேவை பணிக்கு 120 பேர் தேர்வு

Added : செப் 14, 2020
Share
Advertisement

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் நடந்த, 108 ஆம்புலன்ஸ் சேவைக்கான வேலைவாய்ப்பு முகாமில், 120 பேர் தேர்வு செய்யப்பட்டனர். கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனையில், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட, 108 ஆம்புலன்ஸ் சேவைக்கான வேலைவாய்ப்பு முகாம் நடந்தது. இதில், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ஈரோடு, வேலூர், திருப்பத்தூர் மற்றும் நாமக்கல் மாவட்டங்களை சேர்ந்த, 310 பேர் கலந்து கொண்டனர். முதல் கட்டமாக இவர்களின் விண்ணப்பங்கள் அனைத்தும் சரி பார்க்கப்பட்டு, ஓட்டுனர்களுக்கு எழுத்துத்தேர்வு, வாகனம் ஓட்டும் தேர்வும் நடந்தது. அதே போல், மருத்துவ உதவியாளர்களுக்கு எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு நடந்தது. இதில் தேர்ச்சி பெற்ற, 70 மருத்துவ உதவியாளர்களுக்கும், 50 வாகன ஓட்டுனர்களுக்கும் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. தேர்ச்சி பெற்றவர்கள் அனைவரும், வரும் வாரத்தில், சென்னை அலுவலகத்தில் நடக்கும் பயிற்சிக்கு செல்ல உள்ளதாகவும், அங்கு ஓட்டுனருக்கு, 10 நாட்கள் பயிற்சியும், மருத்துவ உதவியாளர்களுக்கு, 45 நாட்கள் பயிற்சியும், வழங்கப்பட உள்ளதாக, 108 ஆம்புலன்ஸ் மாவட்ட அலுவலர் ராமன் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X