பொது செய்தி

தமிழ்நாடு

தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு: தண்டோரா மூலம் மக்களுக்கு எச்சரிக்கை

Added : செப் 14, 2020
Share
Advertisement

ஓசூர்: ஓசூர், கெலவரப்பள்ளி அணையிலிருந்து தென்பெண்ணை ஆற்றில், 1,120 கன அடி நீர் திறக்கப்பட்டதால், கரையோர மக்களுக்கு, தண்டோரா மூலம், வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.


கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர், கெலவரப்பள்ளி அணை நீர்பிடிப்பு பகுதியில், கனமழை பெய்து வருகிறது. அதனால், கடந்த சில நாட்களாக அணைக்கு கூடுதல் நீர்வரத்து உள்ளது. நேற்று முன்தினம், 960 கன அடியாக இருந்த நீர்வரத்து, நீர்பிடிப்பு பகுதியில் பெய்த கன மழையால், நேற்று காலை, 1,120 கன அடியாக அதிகரித்தது. கடந்தாண்டு நவ., மாதத்துக்கு பின், நேற்று தான் அணைக்கு, 1,100 கன அடிக்கு மேல் நீர்வரத்து இருந்தது. அணையின் மொத்த உயரமான, 44.28 அடியில், 40.44 அடிக்கு நீர் இருப்பு இருந்ததால், தென்பெண்ணை ஆற்றில் வினாடிக்கு, 1,120 கன அடி மற்றும் வலது, இடது கால்வாயில், 88 கன அடி தண்ணீர் என மொத்தம், 1,208 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால், தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், கரையோர மக்கள் ஆற்றில் குளிக்கவோ, துணி துவைக்கவோ, ஆடு, மாடுகளுக்கு தண்ணீர் காட்டவோ ஆற்றுக்கு செல்ல வேண்டாம் என, தண்டோரா மூலம் வருவாய்த்துறையினர் எச்சரித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X