பொது செய்தி

தமிழ்நாடு

நீர்வரத்து அதிகரிப்பால் கே.ஆர்.பி., அணை நீர்மட்டம் உயர்வு

Added : செப் 14, 2020
Share
Advertisement

கிருஷ்ணகிரி: கெலவரப்பள்ளி அணையிலிருந்து, அதிக தண்ணீர் திறப்பால், கே.ஆர்.பி., அணை நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.


கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த, 12 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால், ஓசூர், கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று வினாடிக்கு, 1,120 கன அடியாக நீர்வரத்து இருந்தது. பாதுகாப்பு கருதி, அணையிலிருந்து தென்பெண்ணை ஆற்றில் திறக்கப்பட்ட, 1,208 கன அடி நீரால், கிருஷ்ணகிரி, கே.ஆர்.பி., அணை நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. கடந்த, 1ல் கே.ஆர்.பி., அணை நீர்மட்டம், 28 அடியாக இருந்த நிலையில், 12 நாட்களில், ஒன்பது அடி உயர்ந்து நேற்று, 52 அடியில், 37 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு, 732 கன அடியாக நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஆனால், அணையிலிருந்து, 92 கன அடி தண்ணீர் மட்டுமே திறக்கப்பட்டுள்ளது. தென்பெண்ணை ஆற்றில் வரும் தண்ணீர் மற்றும் தொடர் மழையால் கே.ஆர்.பி., அணை நீர்மட்டம், மேலும் உயரும் என, பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில், நேற்று அதிகபட்சமாக தளியில், 20 மி.மீ., மழை பதிவானது. தேன்கனிக்கோட்டையில், 4, பெனுகொண்டாபுரத்தில், 2.2, போச்சம்பள்ளியில், 2.1 என மொத்தம், 32.3 மி.மீ., மழை பதிவாகி இருந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X