சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இருவேறு இடங்களில் மின்சாரம் தாக்கி இருவர் பலி

Added : செப் 14, 2020
Share
Advertisement

கிருஷ்ணகிரி: வேப்பனப்பள்ளி அருகே பொம்மரசனப்பள்ளியை சேர்ந்தவர் பால்ராஜ், 50, விவசாயி; இவர், நேற்று முன்தினம் இரவு, தமிழக எல்லையை ஒட்டிய ஆந்திரா பகுதி விவசாய நிலத்தில் வேலை பார்த்து விட்டு, இரவு வீடு திரும்பினார். அப்போது, மழையால் அந்த வழியில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்ததில், மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பலியானார். பால்ராஜ் ஆந்திர மாநில எல்லையில் இறந்ததால், வேப்பனஹள்ளி போலீசார் அவரது உடலை மீட்டு, ஆந்திரா மாநிலம் குடிப்பள்ளி போலீசாரிடம் ஒப்படைத்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம், கந்திகுப்பம் அருகே தாண்டவபள்ளத்தை சேர்ந்தவர் பிரகாஷ், 21, எலக்ட்ரீஷியன்; நேற்று முன்தினம் முருகப்பன் கொட்டாய் பகுதியில், ஒரு வீட்டில் பணியாற்றினார். அப்போது, மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பலியானார். கந்திகுப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X