பொது செய்தி

தமிழ்நாடு

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் 'நீட்' தேர்வு எழுதிய 6,958 மாணவர்கள்

Added : செப் 14, 2020
Share
Advertisement

வேலூர்: ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில், 6,958 பேர், 'நீட்' தேர்வு எழுதினர்.


மருத்துவ படிப்பில் சேருவதற்கான, 'நீட்' தேர்வு, நேற்று நடந்தது. இதற்காக வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில், 15 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன. இதில், 8,370 பேர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். நேற்று நடந்த தேர்வில், 6,958 பேர் தேர்வு எழுதினர். இது, 83.1 சதவீதமாகும். 1,412 பேர் தேர்வு எழுதவில்லை. இது, 16.9 சதவீதமாகும். சமூக இடைவெளி கடைப்பிடித்து தேர்வு நடந்தது. தெர்மல் ஸ்கேனர் கொண்டு பரிசோதனை செய்த பிறகே, மையங்களுக்கு மாணவர்கள் அனுமதிக்கப்பட்டனர். தேர்வு எழுதும் மாணவர்கள் வசதிக்காக, வேலூர் பழைய பஸ் ஸ்டாண்ட், காட்பாடி, கே.வி.குப்பம், அரியூர், திருப்பத்தூர், ஏலகிரி, வாணியம்பாடி, ஆம்பூர், ராணிப்பேட்டை, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளிலிருந்து தேர்வு மையங்களுக்கு, 120 அரசு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

சிறப்பு பஸ்கள்: திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த, 137 மாணவர்கள், 210 மாணவியர் என மொத்தம், 347 மாணவர்களுக்கு, வேலூர் மற்றும் ராணிப்பேட்டையில் உள்ள மையங்களில் தேர்வு எழுதினர். இதில், அரசு பள்ளியை சேர்ந்த, 44 மாணவர்கள், 145 மாணவியர், என மொத்தம், 189 பேர் ஆவர். இவர்களை, மாவட்ட நிர்வாகம் சார்பில் இலவச பஸ்களில் அழைத்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இலவச பஸ்களில், 33 மாணவர்கள், 72 மாணவியார் என மொத்தம், 105 பேர் மட்டும் சென்றனர். இவர்களை, மாவட்ட கலெக்டர் கந்தசாமி வழியனுப்பினார். மற்ற மாணவ, மாணவியர் அவரவர் விருப்பப்படி அவர்களது சொந்த வாகனம் மற்றும் அரசு பஸ்களில் சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X