பொது செய்தி

தமிழ்நாடு

'நீட்' தேர்வு விவகாரத்தில் அரசுகளை சாடிய உதயநிதி

Added : செப் 14, 2020
Share
Advertisement

ஓமலூர்: 'நீட்' தேர்வு விவகாரத்தில், மத்திய, மாநில அரசுகளை, உதயநிதி சாடினார்.
தர்மபுரி மாவட்டம், இலக்கியம்பட்டியை சேர்ந்த மாணவன் ஆதித்யா, 20; 'நீட்' தேர்வுக்கு பயந்து, நேற்று முன்தினம், வீட்டில், தற்கொலை செய்து கொண்டார். மாணவரின் சொந்த ஊரான, சேலம் மாவட்டம், காடையாம்பட்டி, பூசாரிப்பட்டிக்கு, உடல் நேற்று மாலை கொண்டுவரப்பட்டது. தி.மு.க., இளைஞரணி செயலர் உதயநிதி, மாணவரின் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். பெற்றோருக்கு ஆறுதல் தெரிவித்து, ஐந்து லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கினார்.

பின், உதயநிதி கூறியதாவது: 'நீட்' தேர்வு குறித்து, மத்திய, மாநில அரசுகள் மவுனம் காக்கின்றன. தொடர்ந்து, மாணவர்கள் பலியாகி வருகின்றனர். எருமை மீது மழை பெய்தால் எப்படி இருக்குமோ, அதுபோல் மத்திய, மாநில அரசுகள் உள்ளன. நான்கு ஆண்டில், 12 மாணவர்களை பலி கொடுத்துள்ளோம். தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், 'நீட்' தேர்வு ரத்து செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார். தொடர்ந்து, தமிழக காங்., செயல் தலைவர் மோகன் குமாரமங்கலம், பல்வேறு கட்சியினர், மாணவன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இரவு, 7:00 மணிக்கு, மாணவனின் தோட்டத்தில் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X