பொது செய்தி

தமிழ்நாடு

மழையால் பாதிக்கும் 23 பகுதி: கண்காணிப்பு குழுவுக்கு உத்தரவு

Added : செப் 14, 2020
Share
Advertisement

சேலம்: சேலத்தில், மழையால் பாதிக்கும் 23 பகுதிகளை கண்டறிந்து, கண்காணிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. சேலம் கலெக்டர் ராமன் வெளியிட்டுள்ள அறிக்கை: மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையால் நிரம்பும் நீர்நிலைகளால், 23 பகுதிகள் பாதிக்கும் என, கண்டறியப்பட்டுள்ளன. அப்பகுதியை கண்காணிக்க, பல்வேறு துறைகள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள், அப்பகுதிகளில் நிவாரண மையம் அமைத்து, தங்க வைக்கும் மக்களுக்கு, உடனே நிவாரணம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. பொது வினியோக திட்டத்தில், உணவு பொருட்கள், மூன்று மாதத்துக்கு இருப்பு வைக்கப்படும். நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து, போதிய மருந்து, மாத்திரைகளை தயாராக வைத்திருக்கவும், குறிப்பாக, பாம்பு உள்ளிட்ட விஷக்கடி மருந்து இருப்பு வைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மீட்பு உபகரணங்களான ஜே.சி.பி., ஜெனரேட்டர், மரம் அறுக்கும் கருவி, டார்ச்லைட் உபகரணங்களை தயாராக வைத்திருக்க வேண்டும். மழைநீர் வடிகால் வசதி ஏற்படுத்த, உரிய அலுவலர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டுள்ளது. சாலை, சிறுபாலம், பாலங்கள் தொடர் கண்காணிப்பில் இருக்க வேண்டும். கால்நடைக்கு தேவையான மருந்துகள் தயாராக வைக்கப்படும். மின்வாரியம், ஆய்வு நடத்தி, பழுதான மின்ஒயர், கம்பம், மின்மாற்றிகளை மாற்றி சரிசெய்ய வேண்டும். சிதிலமான, இடிந்து விழும் நிலையில் உள்ள கட்டடங்கள், தொங்கும் மின் கம்பி, மரக்கிளையில் உரசும் மின் தடங்கள் குறித்து, 24 மணி நேரம் செயல்படும், பேரிடர் கால கட்டுப்பாடு மையமான, கட்டணமில்லா தொலைபேசி எண், 1077, 0427 - 2452202 என்ற தொலைபேசி எண்ணுக்கு தகவல் தரலாம். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X