பொது செய்தி

தமிழ்நாடு

கொளத்தூரில் முதல்முறை பாரம்பரிய நெல் வகை நடவு

Added : செப் 14, 2020
Share
Advertisement

கொளத்தூர்: மத்திய அரசின் பாரம்பரிய வேளாண் வளர்ச்சி திட்டத்தில், விவசாயிகளை ஊக்குவித்ததால், கொளத்தூரில், பாரம்பரிய நெல் ரகங்களை, விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர்.


மத்திய அரசின், பாரம்பரிய வேளாண் வளர்ச்சி திட்டத்தில், கொளத்தூர் ஒன்றியத்தில், இயற்கை முறையில் சாகுபடி செய்ய, 2020 - 21ல், 200 ஏக்கர் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதற்கேற்ப, கொளத்தூரில், விவசாயிகள் இயற்கை முறையில் தானியம், காய்கறி சாகுபடி செய்ய தொடங்கியுள்ளனர். அதன் ஒரு பகுதியாக, கண்ணாமூச்சி, காவேரிபுரம், பாலமலை ஊராட்சிகளில், விவசாயிகள், பாரம்பரிய நெல் சாகுபடியை தொடங்கியுள்ளனர். இதுகுறித்து, பாரம்பரிய வேளாண் வளர்ச்சி திட்ட கொளத்தூர் ஒருங்கிணைப்பாளர் பிரபாகரன் கூறியதாவது: கண்ணாமூச்சி, காவேரிபுரத்தில், முதல்முறையாக விவசாயிகள் சாகுபடி செய்ய, தூயமல்லி, கருப்பு கவுனி, மாப்பிள்ளை சம்பா, கிச்சிலி சம்பா நெல் விதைகளை வழங்கியுள்ளோம். நாற்றங்காலில், பயிர்கள் வளர்ந்த நிலையில், விரைவில் நடவு பணி தொடங்க உள்ளது. பாலமலை ஊராட்சியில், ஆறு விவசாயிக்கு, கிச்சிலி சம்பா, கள்ளி மடையான், குடவாலை ஆகிய பாரம்பரிய விதை நெல்லை வழங்கியுள்ளோம். இந்த நெல் விதைகள், வறண்ட நிலத்திலும் கூட வளரும் தன்மை கொண்டவை. இயற்கை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு, ஏக்கருக்கு, உயிரி உரம், 10 கிலோ நவதானியம் உள்ளிட்டவையுடன் சேர்த்து, அரசு, 9,000 ரூபாய் மானியம் வழங்குகிறது. விவசாயிகள் பயன்பெறலாம். இவ்வாறு அவர் கூறினார். இத்திட்டத்தால், கொளத்தூரில் முதல்முறை, விவசாயிகள், பாரம்பரிய நெல் ரகங்களை அதிகளவில் சாகுபடி செய்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X