பொது செய்தி

தமிழ்நாடு

புதிதாக 309 பேருக்கு கொரோனா

Added : செப் 14, 2020
Share
Advertisement

சேலம்: சேலத்தில் புதிதாக, 309 பேர், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சேலம் அரசு மருத்துவமனை, கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டவர்களில், 10 ஆண்கள், 20 பெண்கள், நேற்று குணம் அடைந்ததால், வீட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். ஒரே நாளில், சேலத்தில் புதிதாக, 309 பேர், நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, சேலம் மாநகராட்சியில், 191 பேர், வீரபாண்டி, 21, ஓமலூர், 10, சேலம் ஒன்றியம், 8, அயோத்தியாப்பட்டணம், வடுகப்பட்டி, தலா, 7, மேட்டூர் நகராட்சி, 6, இடைப்பாடி நகராட்சி, மகுடஞ்சாவடி, மேச்சேரி, நங்கவள்ளி, தாரமங்கலம், கெங்கவல்லி தலா, 5 பேர், வாழப்பாடி, 4, இடைப்பாடி, காடையாம்பட்டி, பனமரத்துப்பட்டி, தலா, 3, கொங்கணாபுரம், ஆத்தூர் புறநகர், ஆத்தூர் நகராட்சி, பெத்தநாயக்கன்பாளையம், தலா, 2 என, மாவட்டத்தில், 301 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தவிர, நாமக்கல், 3, தர்மபுரி, 2, திருவள்ளூர், சென்னை, விழுப்புரம், தலா ஒருவர் என, சேலத்தில் நேற்று பாதிக்கப்பட்டோர், 309 பேர். இவர்களுடன் சேர்த்து, இதுவரை சேலத்தில், 14 ஆயிரத்து, 475 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இறந்தவர்கள், 228 பேர்.


பயிற்சி எஸ்.ஐ., பலி: சேலம், வீராணம் அருகே, அல்லிக்குட்டை, சத்யா நகரை சேர்ந்தவர், 54 வயது ஆண். இவர், சேலம் மாவட்ட எஸ்.பி., தனி பிரிவில், மல்லூர் போலீஸ் ஸ்டேஷனில், எஸ்.எஸ்.ஐ.,யாக பணிபுரிந்தார். இவருக்கு, எஸ்.ஐ., பதவி உயர்வு பயிற்சி, கடந்த மாதம் நடந்தது. அதில் பங்கேற்ற அவர், கொரோனாவால் பாதிக்கப்பட்டு, கருப்பூர் பெரியார் பல்கலை முகாமில் அனுமதிக்கப்பட்டார். கடந்த, 3ல், மேல்சிகிச்சைக்கு, கொண்டலாம்பட்டி பைபாஸில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், நேற்று முன்தினம் உயிரிழந்தார்.

பயிற்சி மருத்துவர்: மேட்டூர், 840 மெகாவாட் அனல்மின் நிலையத்தில் பணிபுரியும், 53 வயது இளநிலை பொறியாளர், ஆண்டிகவுண்டர் நகர் அருகே உள்ள, மின்வாரிய ஆர்.இ., குடியிருப்பில் வசிக்கிறார். அவருக்கு, இரு நாளுக்கு முன் கொரோனா வைரஸ் உறுதியான நிலையில், நேற்று, அவரது மகனான, 23 வயது பயிற்சி மருத்துவருக்கு தொற்று உறுதியானது. இருவரும், மேட்டூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதேபோல், மேட்டூர், மஜீத் தெருவை சேர்ந்த, 61 வயது ஆண், அவரது, 52 வயது மனைவிக்கும் தொற்று உறுதியாகி, அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X