சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பைக் மீது வாகனம் மோதல்: சிவகங்கை வாலிபர் பலி

Added : செப் 14, 2020
Share
Advertisement

சேலம்: பைக் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், சிவகங்கை வாலிபர் பலியானார். சிவகங்கை மாவட்டம், எஸ்.வி.மங்கலத்தை சேர்ந்த, மணி மகன் அழகர்சாமி, 26. இவர், சேலம், மாமாங்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். கடந்த, 11 இரவு, 8:45 மணிக்கு, யுனிகான் பைக்கில், சேலம் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வந்துகொண்டிருந்தார். டால்மியா போர்டு அருகே வந்தபோது, அடையாளம் தெரியாத வாகனம், பைக் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில், தூக்கி வீசப்பட்ட அழகர்சாமியை, மக்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். ஆனால், அவர் வழியிலேயே இறந்தார். சூரமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X