சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வீட்டில் பரிகார பூஜை நடத்தி 20 பவுன் திருடிய ஜோதிடர் கைது

Added : செப் 14, 2020
Share
Advertisement

சேலம்: குழந்தையின்மைக்கு பரிகார பூஜை செய்வதாக கூறி, 20 பவுன் நகை திருடிய ஜோதிடரை, போலீசார் கைது செய்தனர்.


சேலம், பழைய சூரமங்கலம், கபிலர் தெருவை சேர்ந்தவர் மெகதாஜி பேகம், 55; 'ஹார்டுவேர்ஸ்' கடை நடத்துகிறார். இவரது இரு மகளுக்கு திருமணம் முடிந்த நிலையில், ஒருவருக்கு குழந்தை இல்லை. இதனால் அதே பகுதியை சேர்ந்த ஜோதிடர் பிரபு, 34, என்பவரிடம், ஜாதகம் பார்த்துள்ளார். வீட்டில் பரிகார பூஜை செய்தால், குழந்தை பெறலாம் என கூறியுள்ளார். இதன்படி, கடந்த ஆக.,27ல், மெகதாஜி பேகம் வீட்டில், பிரபு பரிகாரம், ?ஹாமம் நடத்தியுள்ளார். அப்போது வீட்டிலிருந்த, 20 பவுன் நகைகளை திருடியுள்ளார். நகை மாயமானது குறித்து, மெகதாஜி பேகம் கேட்டபோது, பிரபு மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் சூரமங்கலம் போலீசில் புகாரளித்தார். விசாரணை நடத்திய போலீசார், பிரபுவை நேற்று முன்தினம் கைது செய்தனர். இதுகுறித்து போலீசார் கூறியதாவது: மெகதாஜி பேகம் வீட்டில் திருடிய நகைகளை, சேலத்தில் உள்ள நான்கு கடைகளில் விற்று, பிரபு புது நகை வாங்கியுள்ளார். அதையும் அதே கடைகளில் விற்று, அதன் மூலம் கிடைத்த பணத்தால், டூவீலர், காலி வீட்டுமனை வாங்கியுள்ளார். டூவீலர், 40 ஆயிரம் ரூபாய், வைர நெக்லஸ், காலி மனை பத்திரத்தை பறிமுதல் செய்துள்ளோம். இவ்வாறு போலீசார் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X