பொது செய்தி

தமிழ்நாடு

நோயை துரத்த யோகாவும் துணை...: இயற்கைக்கு இல்லை ஈடு இணை

Added : செப் 14, 2020
Share
Advertisement
 நோயை துரத்த யோகாவும் துணை...: இயற்கைக்கு இல்லை ஈடு இணை

ஆங்கில மருத்துவத்தில் கோடிக்கணக்கான மக்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பெரும்பாலான மக்கள் குணமடைந்து வருகின்றனர். ஆனாலும், உயிரிழப்பைத் தடுக்க முடியாத நிலை தொடர்கிறது. பாரம்பரிய மருத்துவத்தையும் கூட்டு சிகிச்சையாக வழங்கும்போது, அற்புதமான தீர்வு கிடைப்பதையும் எல்லோரும் உணர்ந்து வருகின்றனர்.

தமிழகத்தில் பிற சிகிச்சைகளுடன் யோகா மற்றும் இயற்கை மருத்துவத்தை இணைந்து வழங்கியதில் இதுவரை மூன்று லட்சத்துக்கும் அதிகமான நோயாளிகள் குணமடைந்துள்ளதாகக் கூறுகின்றனர், இயற்கை மருத்துவர்கள். நமது உடல் நோயுறும்போது அதிலிருந்து தாமாகவே மீளும் திறனை கொண்டது என நம்புகிறது, இயற்கை மருத்துவம். நாள்பட்ட நோய்களில் இது சிறப்பாகச் செயல்படுகிறது. கொரோனா போன்ற தீவிர பாதிப்புகளின்போது,​ யோகா மற்றும் இயற்கை சிகிச்சை நோயாளிக்கு நீடித்த நிவாரணத்தை வழங்குகிறது.ஒரு நபரின் உள்ளார்ந்த உருவாக்கம், நோயை சமாளிக்கும் திறன் மற்றும் பிற பரிமாணங்களை கருத்தில் கொண்டு ஒவ்வொரு நோயாளிக்குமான தனிப்பட்ட சிகிச்சைகளை வழங்குகின்றனர், இயற்கை மருத்துவர்கள்.

தென்காசி தங்கப்பழம் யோகா மற்றும் நேச்சுரோபதி மருத்துவக் கல்லுாரியில் கொரோனா நோயாளிகளுக்கான பிரத்யேக யோகா மற்றும் இயற்கை சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு தரப்படும் சிகிச்சையில் மருந்துகள் அதிகமில்லை. இந்த முறையில் சிகிச்சை பெற்று குணமாகித் திரும்பும் கொரோனா நோயாளிகள், தங்களுடைய உடலும் மனதும் புத்துயிர் பெற்றதைப் போல உணர்வதுதான் இயற்கை மருத்துவத்தின் மகத்துவம்.

இயற்கையை எதிர்த்து யாரால் எதனால் வெல்ல இயலும்?


''விரைவான குணம்!''

இயற்கை மருத்துவ சிகிச்சை முறையில் சரியான நீரேற்றம், ஆவி பிடித்தல், நறுமண சிகிச்சை, உப்பு நீர் கொப்பளித்தல், ஜலா நெட்டி, அக்கு பிரஷர், அக்குபஞ்சர், சூரிய குளியல், இயற்கை உணவு, நோய் எதிர்ப்பை அதிகரிக்கும் இயற்கை பழச்சாறுகள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சூடான பானங்கள் ஆகியவை அடங்கும். இதனால், நோயாளிகள் விரைந்து குணமடைகின்றனர். அதிகபட்சம், ஏழு நாட்களுக்குள் குணமடைந்து வீடு திரும்புகின்றனர்.-தனலட்சுமி, உதவி மருத்துவ அலுவலர்,யோகா மற்றும் இயற்கை மருத்துவ சிறப்பு சிகிச்சை பிரிவு, ஆரம்ப சுகாதார நிலையம், பொங்கலுார்.தொடர்பு எண்: 97871 45396இ.மெயில் : drdhanasathishbnys@gmail.com


நோய் எதிர்ப்பு சக்தி பானம்!

இயற்கை நல மருத்துவ முறையில் நோய் எதிர்ப்பு சக்தி பானம் தயாரிக்கும் முறை:தண்ணீர், 250 மில்லி, இஞ்சி ஒரு துண்டு, மிளகு அரை டீஸ்பூன், மஞ்சள் துாள் ஒரு சிட்டிகை, நாட்டு சர்க்கரை ஒரு டீஸ்பூன், எலுமிச்சை அரை பழம்.செய்முறை: மிளகு, இஞ்சி இரண்டையும் தனித்தனியாக இடித்து வைத்து கொள்ளவும். தண்ணீர் கொதித்தவுடன், மிளகு துாள், மஞ்சள் துாள், இஞ்சி ஆகியவற்றை போட்டு, மூன்று நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும். இறக்கிய பிறகு, சூடு ஆறியவுடன் எலுமிச்சம் பழத்தை பிழிந்து வடிகட்டி குடிக்கலாம். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகும். ஜீரண சக்தி நன்றாக இருக்கும்.

-நமது நிருபர் குழு-

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X