பார்லி கூடியது: தலைவர்கள் மறைவுக்கு இரங்கல்

Updated : செப் 14, 2020 | Added : செப் 14, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
MonsoonSession, Parliament, பார்லிமென்ட்,  தலைவர்கள், இரங்கல்

புதுடில்லி: பார்லிமென்ட் மழைகால கூட்டத்தொடர் இன்று துவங்கியது. முதல்நாளான இன்று முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் அஜித் ஜோகி மறைவுக்கு இரங்கல் தெரிவித்து ஒரு மணி நேரம் அவை ஒத்திவைக்கப்பட்டது.

இன்று துவங்கிய பார்லிதொடர் அக்., 1 வரை நடக்க உள்ளது. முதல்நாளான இன்று காலை 9:00 மணி முதல் மதியம் 1:00 வரை நடைபெற உள்ளது. நாளை முதல் மதியம் 3 :00 மணி முதல் இரவு 7:00 மணி வரை நடக்க உள்ளது. இன்று அவை துவங்கியதும், முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் அஜித்ஜோகி, ம.பி., கவர்னர் லால்ஜி டாண்டன், உ.பி., அமைச்சர்கள் கமல்ராணி, சேத்தன் சவுகான், முன்னாள் மத்திய அமைச்சர் ரகுவன்ஷ் பிரசாத் சிங் மற்றும் எம்.பி.,க்கள் மறைவுக்கு உள்ளிட்டோர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து ஒரு மணி நேரம் அவை ஒத்தி வைக்கப்பட்டது.


latest tamil news




சீன விவகாரம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் எனக்கூறி காங்கிரஸ் எம்.பி., ஆதிர் ரஞ்சன் சவுத்ரி நோட்டீஸ் வழங்கியுள்ளார். அதேபோல், நீட் தேர்வு தொடர்பாக விவாதிக்க வேண்டும் எனக்கூறி திமுக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி.,க்கள் நோட்டீஸ் வழங்கியுள்ளனர். பார்லிமென்ட் தொடரில் பங்கேற்க வந்துள்ள தி.மு.க., எம்.பி.,க்கள் நீட் தேர்வுக்கு எதிராக போராட்டம் நடத்தினர்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
14-செப்-202015:38:01 IST Report Abuse
skv srinivasankrishnaveni திமுகாவுக்குத்தெருவேளைகளே இல்லே எப்போதும் இந்த ஹிந்தியைகாட்டிண்டு மாரடிக்குதுங்க இதுகளை அடக்க ஒரேவழி இதுகளெல்லோரையும் ஒருஇடத்துலே உக்கரவச்சு ஹிந்தி அந்நியநாட்டுப்பாஷை இல்லேன்னுபுரியும்படியாக சொல்லுங்க கூடவே ஒரு மொழிபெயர்ப்பவரையும் வச்சுண்டும் சொல்லலாம் தப்பே இல்லீங்க வீம்புக்குஅடம்பிடிக்குறாங்க தங்கள் படிக்கலாம் அவங்களால் நடத்தப்படும் பள்ளிகளில் ஹிந்தி இருக்கலாம் அரசுப்பல்ல்லிலேபடிக்குற குழந்தை எண்ணையாபாவம் செய்துதுங்க
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X