அரசியல் செய்தி

தமிழ்நாடு

நீட் எதிர்ப்பு மாஸ்க்குடன் சட்டசபை வந்த திமுக எம்எல்ஏ.,க்கள்

Updated : செப் 14, 2020 | Added : செப் 14, 2020 | கருத்துகள் (63)
Share
Advertisement
Tamilnadu, Assembly, DMK, MLA, BanNEET, Mask, தமிழக, சட்டசபை, திமுக, நீட், எதிர்ப்பு, மாஸ்க், கலைவாணர் அரங்கம்

சென்னை: முதன்முறையாக கலைவாணர் அரங்கில் தமிழக சட்டசபை கூடியது. முதல் நாளில் கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, ஒத்திவைக்கப்பட்டது. கூட்டத்திற்கு நீட் தேர்வை ரத்து செய்யக்கோரிய வாசகங்கள் அடங்கிய மாஸ்க் அணிந்து திமுக எம்எல்ஏ.,க்கள் வந்திருந்தனர்.


latest tamil news


கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் சட்டமன்ற கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்பட்டது. அதன்பின்னர் இன்று தொடங்க உள்ள கூட்டத் தொடர் செப்டம்பர் 16ம் தேதி வரை 3 நாட்கள் நடைபெறுகிறது. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக தற்போதைய கூட்டத் தொடர் சென்னை வாலாஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்கில் மூன்றாம் தளத்தில் உள்ள பல்வகை கூட்டரங்கத்தில் துவங்கியது. முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் மாஸ்க் அணிந்து பங்கேற்றனர்.


latest tamil news


முதல் நாளான இன்று (செப்.,14), முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, காங்., எம்பி வசந்தகுமார், திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் உள்ளிட்டோருக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அவையை நாளைக்கு ஒத்திவைத்து சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார். கூட்டத்தொடரில் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏ.,க்கள் நீட் தேர்வை ரத்து செய்க என்ற வாசகங்கள் அடங்கிய மாஸ்க் அணிந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (63)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Jay - Bhavani,இந்தியா
15-செப்-202010:20:16 IST Report Abuse
Jay நீட் தேர்வை கொண்டு வந்ததே காங்கிரஸ்-திமுகா தான். அப்ப தெரியவில்லையா?
Rate this:
Cancel
Muruga Vel - Mumbai,இந்தியா
15-செப்-202006:02:31 IST Report Abuse
 Muruga Vel வெள்ளையும் சொள்ளையுமா நிர்மா விளம்பரத்துக்கு நடிக்கிற மாதிரி இருக்காங்க
Rate this:
Cancel
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
14-செப்-202019:08:04 IST Report Abuse
skv srinivasankrishnaveni கபட வேஷதாரிகளேதான் இந்தக்கும்பல் பிராட்டுக்கூட்டம் நாசமாப்போக
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X