சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சோடா நிறுவன உரிமையாளர் வெட்டிக்கொலை

Added : செப் 14, 2020
Share
Advertisement
 சோடா நிறுவன உரிமையாளர்  வெட்டிக்கொலை

கோவை : கோவையில் முன்விரோதம் காரணமாக சோடா நிறுவன உரிமையாளர் பிஜூ என்பவர் வெட்டி கொலை செய்யப்பட்டார்.
கோவை ஆவாரம்பாளையம் தனலட்சுமி நகரை சேர்ந்தவர் பிஜூ 40. இவர் ராம்நகர் கோகலே வீதியில் 20 ஆண்டுகளாக சோடா கடை நடத்தி வருகிறார். வட்டிக்கு பணம் கொடுத்தும் வருகிறார். நேற்று கடையின் முன் நின்றிருந்த இவரை ஏழு பேர் கொண்ட கும்பல் ஆயுதங்களுடன் தாக்க வந்தது. தப்பி ஓடிய அவரை அக்கும்பல் விரட்டிச் சென்று வெட்டி கொலை செய்தது.
போலீஸ் கமிஷனர் சுமித்சரண் கூறுகையில் ''கொலை சம்பவத்தில் ஈடுபட்ட ஏழு பேரை பிடிக்க நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளின் அடிப்படையில்விசாரணை நடந்து வருகிறது'' என்றார். பிஜூ கொலை செய்யப்பட்டதை அறிந்த அவரது மனைவி சரண்யா 29 துாக்கிட்டு தற்கொலை செய்ய முயன்றார். அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
போலீசார் கூறுகையில் 'காந்திபுரத்தை சேர்ந்த ஆனந்த், கோவை நரசிம்மநாயக்கன்பாளையத்தை சேர்ந்த நிதிஷ்குமார் 20, என்பவருக்கும் கடந்த ஜூனில் தகராறு ஏற்பட்டது. நிதிஷ்குமார் சிறையில் அடைக்கப்பட்டார். இரு குடும்பத்தினர்இடையே இருந்த பிரச்னையை கொலை செய்யப்பட்ட பிஜூ தீர்க்க முயற்சி செய்தார். ஜாமினில் வெளியே வந்த நிதிஷ்குமாரை ஆனந்தின் நண்பர்கள் ராகுல், விஷ்ணு ஆகிய இருவரும்கத்தியால் குத்தினர். நிதிஷ்குமார் மீதான தாக்குதலுக்கு பிஜூ காரணம் என ஏழு பேர் கொண்ட கும்பல் அவரை கொலை செய்துள்ளது' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X