அரசியல் செய்தி

தமிழ்நாடு

நீட் விவகாரத்தில் ஆளுங்கட்சி நாடகம்: ஸ்டாலின்

Updated : செப் 14, 2020 | Added : செப் 14, 2020 | கருத்துகள் (67)
Share
Advertisement
D.M.K,M.K.Stalin,NEET exam,Stalin,medical entrance test,தி.மு.க,நீட்,ஸ்டாலின்

சென்னை : நீட் தேர்வு விவகாரத்தில் ஆளுங்கட்சியினர் நாடகம் நடத்தி வருவதாக திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை கலைவாணர் அரங்கில் சட்டசபை கூட்டத்தில் முதல் நாள் நிகழ்ச்சி முடிந்த பின்னர் அவர் கூறியதாவது: சட்டசபையின் முதல்நாளில் மறைந்த தலைவர்கள், முன்னாள் ஜனாதிபதி, எம்எல்ஏ.,க்கள், கொரோனாவினால் இறந்தவர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கு முன்னர், நீட் தேர்வு காரணமாக மாணவ , மாணவிகள் தற்கொலை செய்து கொள்வது தொடர்கிறது. எனவே, அவர்களது பெயரையும் இரங்கல் தீர்மானம் சேர்த்து நிறைவேற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கை வைத்தேன். ஆனால், சபாநாயகர் ஏற்று கொள்ளவில்லை. இது வருத்தத்திற்குரியது. கண்டனத்திற்குரியது.

இரண்டு நாட்கள் சட்டசபை கூட்டம் நடத்துவது போதாது என அலுவல் ஆய்வுகுழு கூட்டத்தில் திமுக பொது செயலாளர் துரைமுருகன் கோரிக்கை வைத்தார். ஆனால், அதனை அரசு ஏற்கவில்லை. நீட் பிரச்னை, புதிய கல்விக்கொள்கை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் எழுப்ப உள்ளோம். இவை அனைத்தும், இரண்டு நாட்களில் சட்டசபையில் எடுத்து கொள்ள முடியுமா?


latest tamil news


ஆளுங்கட்சியினர் நீட் தேர்வில் நாடகம் ஆடி வருகின்றனர். இதுவரை நீட் தேர்வு தொடர்பாக, பிரதமரையோ, மத்திய அமைச்சரையோ சந்தித்து வலியுறுத்தவில்லை. போதுமான அழுத்தம் தரவில்லை. மாநில அரசு, மத்திய அரசுக்கு போதிய அழுத்தம் தராமல், கூனி குறுகி போய் இருக்கக்கூடிய அரசாக தமிழக அரசு உள்ளது. இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (67)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா
14-செப்-202020:46:33 IST Report Abuse
sankaranarayanan சென்னை கலைவாணர் அரங்கில் சட்டசபை கூட்டத்தில் முதல் நாள் நிகழ்ச்சி முடிந்த பின்னர் நீட் தேர்வு காரணமாக மாணவ , மாணவிகள் தற்கொலை செய்து கொள்வது பற்றி, அவர்களது பெயரையும் இரங்கல் தீர்மானம் சேர்த்து நிறைவேற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கை சுடலை வைத்தார். ஆனால், சபாநாயகர் ஏற்று கொள்ளவில்லை. இது வருத்தத்திற்குரியது. உண்மை ஏனென்றால், சாதாரமாக, கலைவாணர் அரங்கில் சட்டசபை கூட்டம் நடக்காது. நாடகம் தான் நடக்கும். அங்கு நாடக மேடைதான் உள்ளது. அது நாடக அரங்காயிற்றே. ஆதலால் அதையே நினைத்துக்கொண்டு - ஆளுங்கட்சியினர் நீட் தேர்வில் நாடகம் ஆடி வருகின்றனர் என்று அவர் கூறியிருக்க வாய்ப்பு உண்டு. தவறொன்றும் இருப்பதாக எனக்கு ஒன்றும் தெரியவில்லை
Rate this:
Cancel
rajan -  ( Posted via: Dinamalar Android App )
14-செப்-202020:19:09 IST Report Abuse
 rajan அர்ஜுன் சம்பத் சூர்யாவின் கருத்துக்கு பதில் அளித்த வீடியோ பதிவு தினமலர் இணையதளத்தில் பதிவு செய்துள்ளனர் தயவுசெய்து அதை கேளுங்கள். அதற்குப் பிறகும் உங்களுக்கு தெளிவு பிறக்காவிட்டால் உங்களுக்கு புரிந்து கொள்ளும் சக்தி இல்லை என்று தான் அர்த்தம்.
Rate this:
Cancel
Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ
14-செப்-202020:12:23 IST Report Abuse
Rajagopal என்னா சொல்லுதீங்க?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X