மழைக்காலக் கூட்டத்தொடர்: எதிர்க்கட்சியில் முக்கிய தலைவர்கள் 'மிஸ்சிங்'

Updated : செப் 14, 2020 | Added : செப் 14, 2020 | கருத்துகள் (11)
Share
Advertisement

புதுடில்லி: நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொடர்ச்சியான பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் சூழலில், இன்று(செப்., 14) துவங்கியுள்ள பார்லிமென்ட் மழைக்காலக் கூட்டத்தொடர் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.

கொரோனா நெகடிவ் சான்று இருந்தால் மட்டுமே அனுமதி, கூட்டத்தொடருக்கு முன்பான அனைத்துக் கட்சிக் கூட்டம் ரத்து, கேள்வி நேரம் ரத்து, குறுகிய நேரம் மட்டுமே ஜீரோ ஹவர், தனி நபர் மசோதாக்களுக்கு அனுமதி மறுப்பு உள்ளிட்ட மாற்றங்களுடன் இந்தக் கூட்டம் நடைபெற்று வருகிறது.



latest tamil news




இதில், பொருளாதார மந்தநிலை, வேலையின்மை, இந்திய - சீன எல்லைப் பிரச்னை உள்ளிட்டவை குறித்து கேள்வி எழுப்பப் போவதாக மக்களவை சபாநாயகரிடம் தி.மு.க., தலைவர் டி.ஆர்.பாலு கடிதம் அளித்துள்ளார். மேலும், ஓ.பி.சி., கிரிமிலேயர், மாநிலங்களுக்கான ஜி.எஸ்.டி., நிலுவைத் தொகை உள்ளிட்ட பிரச்னைகள் குறித்தும் விவாதிக்க வேண்டும் என, எதிர்க்கட்சிகள் தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

'சீனா உடனான எல்லைப் பிரச்சினை, பொருளாதார நெருக்கடி ஆகியவை குறித்து இரு அவைகளிலும் விவாதிக்க வேண்டும்' என, காங்., சார்பில் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். இதேபோல் வர்த்தக முடக்கம், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறையின் நிலை, கொரோனாவை மத்திய அரசு கையாளும் விதம், விமான நிலையங்கள் தனியார்மயமாதல், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு ஆகியவை குறித்து விவாதிக்க நேரம் கேட்கப்பட்டுள்ளது.


latest tamil news




4 மசோதாக்களுக்கு எதிர்ப்பு


மத்திய அரசு ஏற்கனவே பிறப்பித்த அவசர சட்டங்கள் நடப்பு கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படவுள்ளன. அதில், விவசாயம் சார்ந்த மூன்று அவசர சட்டங்கள் மற்றும் வங்கி ஒழுங்குமுறைச் சட்டத் திருத்தம் ஆகிய 4 சட்டங்களை எதிர்க்க காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. இதற்கு கடும் எதிர்ப்பை வெளிப்படுத்த பல்வேறு கட்சிகளின் ஆதரவை காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கோரியுள்ளார்.


latest tamil news



நடப்பு மழைக்கால கூட்டத்தொடரில் 2 நிதிசார்ந்த மசோதாக்கள் உட்பட மொத்தம் 47 மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இப்படி மிக முக்கியத்துவம் வாய்ந்த இந்த மழைக்காலக் கூட்டத்தொடரில், எதிர்க்கட்சியின் முன்னணி வரிசையில் இருக்கும் முக்கிய தலைவர்கள், தனிப்பட்ட மருத்துவத் தேவைகளுக்காக பங்கேற்காமல் உள்ளனர்.

குறிப்பாக, காங்., முக்கியத் தலைவர்கள் சோனியா, ராகுல், மன்மோகன் சிங் மற்றும் சிதம்பரம் உள்ளிட்டோர் பங்கேற்கவில்லை. முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படும் கூட்டத் தொடரில் இவர்கள் பங்கேற்காதது, எதிர்க்கட்சிக்கு பின்னடைவைத் தரவாய்ப்புள்ளதாக அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா
14-செப்-202020:52:53 IST Report Abuse
sankaranarayanan அவர்கள் அனைவரும் சீனாவிற்கு சுற்றுலா போயிருப்பாங்க?
Rate this:
Cancel
madhavan rajan - trichy,இந்தியா
14-செப்-202018:21:21 IST Report Abuse
madhavan rajan இது போன்ற முக்கிய நிகழ்வுகளில் கலந்து கொள்ளாமல் ஓடிவிட்டு பிறகு வசனம் விடுவார் ... நான் பேசினால் பூகம்பம் வெடிக்குமென்று. அப்படிப்பட்ட வீரர்கள் நிறைந்த கட்சி வாழ்க.
Rate this:
Cancel
sundarsvpr - chennai,இந்தியா
14-செப்-202017:24:15 IST Report Abuse
sundarsvpr செய்தியில் குறிப்பிட்ட நபர்கள் தவிர நன்றாக அர்த்தபுஷ்டியுடன் பேசுவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் . பேசியவர்கள் மீள பேசுவது மற்ற நபர்களுக்கு வாய்ப்பு குறைகிறது. இதனை மூத்த அங்கத்தினர்கள் விட்டுக்கொடுக்கவேண்டும். அங்கத்தினர் எல்லோரும் திறமை வாய்ந்தவர் என்பது மறுக்கமுடியாது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X