இந்திய நிலைகளை தாக்குதல் நடத்த ஜின்பிங் திட்டம்: அமெரிக்க நாளிதழ்

Updated : செப் 14, 2020 | Added : செப் 14, 2020 | கருத்துகள் (23)
Share
Advertisement
china, Jingping, XIjingping, chinesepresident, india, americadaily, சீனா, அதிபர், ஜின்பிங், இந்தியா, ராணுவம்,

வாஷிங்டன்: லடாக் எல்லையில் கல்வான் பகுதியில் சீன ராணுவத்தின் அத்துமீறலுக்கு அதிபர் ஜின்பிங் தான் திட்டமிட்டார் எனவும், இது தோல்வியில் முடிந்ததால், மற்றொரு தாக்குதலுக்கு அவர் திட்டமிடுகிறார் என அமெரிக்காவின் முன்னணி பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர், லடாக்கின் கல்வான் பகுதியில் சீன ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இதில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். பலர் காயமடைந்தனர். இந்திய வீரர்கள் பதிலடியில் சீன வீரர்களும் உயிரிழந்துள்ளனர். இதனை அந்நாட்டு அரசு வெளிப்படையாக அறிவிக்கவில்லை. இருப்பினும் 40 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், அமெரிக்காவின் முன்னணி நாளிதழ் ஒன்று வெளியிட்ட செய்தியில் கூறியுள்ளதாவது: இந்திய எல்லையில், சீன ராணுவம் அத்துமீறி நடந்து கொண்டதற்கு அதிபர் ஷி ஜின்பிங் தான் காரணம். ஆனால், யாரும் எதிர்பார்க்காத வகையில் இந்த முயற்சியில் சீன ராணுவம் தோல்வியடைந்தது. இந்திய எல்லையில் சீன ராணுவத்தின் தோல்வியானது பல விளைவுகளை ஏற்படுத்தும். சீன ராணுவத்தின் தலைவராகவும், ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராகவும் உள்ள , ஜின்பிங்கிற்கு, இந்தியா மீது மற்றொரு தாக்குதல் நடத்தவும் , இந்த தோல்வி தூண்டுவதாக உள்ளது.


latest tamil news


கல்வானில் நடந்த மோதலில் 43 சீன வீரர்கள் உயிரிழந்துள்ளனர். ஆனால், இந்த பலி 60 ஐ தாண்டும். கல்வானில், இந்திய ராணுவம் கடுமையாக போராடியது. ஆனால், சீனா தனது தோல்வியை ஒத்து கொள்ளாது. மலையின் உயரத்தில் சீனா சமீபத்தில் ஆக்கிரமித்த பகுதி ஒன்றை, இந்தியா மீண்டும் மீட்டெடுத்தது. இது சீன வீரர்களை ஆச்சர்யமடைந்தனர். அதிர்ச்சியடைந்த அவர்கள் பதிலடிக்கு கொடுக்க முயன்றனர். ஆனால், சீனாவின் முயற்சி பலனளிக்கவில்லை. இவ்வாறு அந்த கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Muruga Vel - Mumbai,இந்தியா
15-செப்-202014:11:59 IST Report Abuse
 Muruga Vel அமேரிக்கா தளவாடங்கள் விற்க இந்த மாதிரி கிளப்பி விடுவாங்க
Rate this:
Cancel
Viswam - Mumbai,இந்தியா
14-செப்-202021:37:09 IST Report Abuse
Viswam எல்லையில் புகுந்து தொல்லை கொடுத்து, இந்திய அரசை ஆயுதம் வாங்குவதில் பணத்தை செலவு செய்ய வைத்து, கரோனாவால் பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தை மீட்க ஏதுவாக பணம் புழங்குவதற்கு இல்லாமல் போகச்செய்து, சீனாவிலிருந்து தப்பி ஓடும் நிறுவனங்களை இப்பொது இந்தியா இருக்கும் நிலையில் முதலீடு செய்யலாமா வேண்டாமா என்ற குழப்பத்தில் ஆழ்த்தி, சுற்றி உள்ளநாடுகளை வளைத்து அதன் மூலமாக திருகுவலி கொடுத்து, தன்னாட்டு மக்களை மட்டும் கரோனாவிலிருந்து ஏற்கனவே கண்டுபிடித்து வைத்த வேக்சின் கொடுத்து காப்பாற்றி, முன்னேறிய நாடுகளான ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பானை வேறு விதமாக போட்டு பார்த்து, அமெரிக்காவிற்குள் ஒற்றர்படை அனுப்பித்து ரகசியங்களை திருடி, தெற்கு சீனா கடலில் டிராமா போட்டு, பாகிஸ்தானுக்காக ஐநாசபையில் காஷ்மீரை இந்த சமயத்திலும் கையில் எடுத்து... அப்பாடா இந்த சீனர்களின் அடாவடித்தனத்திற்கு எல்லையே இல்லை. எதற்காக இந்த நாயை இங்கு வரவைத்து விரும்தோம்பல் செய்தோம் என்று ஒவ்வொருநாளும் வருந்தும் அளவிற்கு நிலை. அப்படியே சீன கம்யூனிஸ்ட் பார்ட்டிஇக்குள் அடிதடி நடந்து ஜின்பிங் ராஜினாமா செய்து வேறு ஒரு ஆள் வந்தாலும் அவனும் இந்த வேலைகளை செய்யமாட்டான் என்று சொல்லமுடியாது. சீன டி என் ஏ இந்த கொரநா கிருமியைவிட மோசமானது.
Rate this:
Cancel
RajanRajan - kerala,இந்தியா
14-செப்-202021:06:50 IST Report Abuse
RajanRajan அழிவை தேடும் சீனனை மகாபாரத கிருஷ்ணன் நிர்மூலமாக்கும் காலம் நெருங்கி கொண்டிருக்கிறது. வந்தே மாதரம் ஜெய் ஜவான்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X