கொரோனா வைரஸ் வூஹான் ஆய்வகத்தில் தயாரிக்கப்பட்டது உண்மை: சீன வைராலஜிஸ்ட் டாக்டர்

Updated : செப் 14, 2020 | Added : செப் 14, 2020 | கருத்துகள் (35) | |
Advertisement
வாஷிங்டன்: கொரோனா வைரஸ் வூஹான் ஆய்வகத்தில் தயாரிக்கப்பட்டது என சீன வைராலஜிஸ்ட் டாக்டர் லி-மெங் யான் (Dr. Li-Meng Yan) திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளார்.சீனாவின் வூஹானில் இருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி, கோடிக்கணக்கான மக்களை பாதித்துள்ளது. பல லட்சம் பேர் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தனர். இந்த வைரஸ், சீனாவில் உள்ள ஆய்வகத்தில் செயற்கை முறையில்
CoronaVirus, WuhanLab, ScientificProof, Chinese, Virologist

வாஷிங்டன்: கொரோனா வைரஸ் வூஹான் ஆய்வகத்தில் தயாரிக்கப்பட்டது என சீன வைராலஜிஸ்ட் டாக்டர் லி-மெங் யான் (Dr. Li-Meng Yan) திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளார்.

சீனாவின் வூஹானில் இருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி, கோடிக்கணக்கான மக்களை பாதித்துள்ளது. பல லட்சம் பேர் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தனர். இந்த வைரஸ், சீனாவில் உள்ள ஆய்வகத்தில் செயற்கை முறையில் உருவாக்கப்பட்டது எனவும், வேண்டுமென்றே சீனா பரவவிட்டதாகவும் அமெரிக்கா தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தது. அதற்கு சீனா தரப்பில் மறுப்பும் தெரிவிக்கப்பட்டது.இந்நிலையில், சீனாவை சேர்ந்த வைராலஜிஸ்ட்டான டாக்டர் லி-மெங் யான் (Li-Meng Yan), கொரோனா வைரஸ், வூஹான் ஆய்வகத்தில் தயாரிக்கப்பட்டதாகவும், அதற்கான விஞ்ஞான ஆதாரம் தன்னிடம் இருப்பதாகவும் கூறியுள்ளார்.latest tamil news


இது தொடர்பான ஆராய்ச்சியை மேற்கொண்ட அவர் கூறியதாவது: கொரோனா வைரஸ் வூஹான் ஆய்வகத்தில் தயாரிக்கப்பட்டது என்பதற்கு விஞ்ஞான ஆதாரம் தன்னிடம் இருக்கிறது. கொரோனா பதிவாகியபோது உலக சுகாதார அமைப்பிலிருந்து எந்த பதிலும் இல்லை. உலகம் எதிர்கொள்ளவிருக்கும் ஆபத்தை அறிந்திருந்தாலும் சீன அதிகாரிகள் எனது எச்சரிக்கைகளை புறக்கணித்தனர். இந்த வைரஸ் இயற்கையிலிருந்து வந்ததல்ல. உள்ளூர் மருத்துவர்கள் மற்றும் சில விஞ்ஞானிகள் மூலமாக இது தயாரிக்கப்பட்டது என்பதை நான் அறிந்திருக்கிறேன்.latest tamil news


SARS CoV-2 ஒரு உயர் விகாரி வைரஸ். இதை யாரும் கட்டுப்படுத்தாவிட்டால் பெரிதளவில் பாதிப்பை ஏற்படுத்தும். இந்த ஆபத்து குறித்து உலகிற்கு தெரியப்படுத்த முயற்சிக்கையில், சீன அதிகாரிகள் தன்னை அச்சுறுத்தினர். இதன் காரணமாக நான் சீனாவை விட்டு அமெரிக்கா வர வேண்டியிருந்தது. என்னைப் பற்றி வதந்திகளை பரப்புவதற்கும், எனது அனைத்து தகவல்களையும் நீக்குவதற்கும் சீன அதிகாரிகளை நியமித்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.யானின் இந்த குற்றச்சாட்டிற்கு இதுவரையில் சீனா தரப்பில் பதில் வரவில்லை. தனது பாதுகாப்பிற்காக அவர், சீனாவில் இருந்து வெளியேறி தற்போது அமெரிக்காவில் தஞ்சமடைந்துள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (35)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
16-செப்-202011:51:33 IST Report Abuse
skv srinivasankrishnaveni சொல்லியாச்சில்லே இந்த லேடிக்கு உசிரு எப்போதும்வெனாலும் போயிடும் பார்த்துன்னேயிருக்கவும் கொலைக்கே அஞ்சாத கொடுங்கோலர்களேதான் சீனாவும் கொரியாவும் கிம் என்னடன்னு தன்னாட்டுக்குள்ளே எவன் வந்தாலும் சுட்டுத்தள்ளுவேன் என்று கூவுறான் இநத சீனாக்கார கொலைகாரனுலகையே அளிக்க ஏவி விட்டுருக்கான் நாசமாப்போக
Rate this:
Cancel
Sampath Kumar - chennai,இந்தியா
16-செப்-202008:01:56 IST Report Abuse
Sampath Kumar ஏதா புண் தறித்து போல சொல்லற இந்த சப்பைமூஞ்சி கரண் எதுக்கு செய்தான் ? எல்லாம் உலக அரசியில் தான் அமெரிக்கா எலேச்டின் வருது எது அரசியில் பார்ட்டிக்கு உதவும் ??
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
14-செப்-202017:49:49 IST Report Abuse
duruvasar குஞ்சு மணி, அறவோன், தலபுராணத்தார், மதுரை மன்னன் பாண்டியன், ஆப்பு நாதன், சவூதி ராஜா, பிஸி ஐயர் எல்லாம் கொரான காலத்தில எங்கே டூர் போயிட்டாங்க. ஒருத்தரையும் காணோம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X