தமிழ்நாடு

கூடுதல் கட்டணம் வசூலித்த மருத்துவமனைக்கு நோட்டீஸ் 

Added : செப் 14, 2020
Share
Advertisement

கோவை : கொரோனா சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் வசூலித்த, ஆறு தனியார் மருத்துவமனைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில், கொரோனா பாதித்த நோயாளிகளின் சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் எழுந்தன. இதை தொடர்ந்து, மருத்துவம் மற்றும் ஊரகநலப்பணிகள் இணை இயக்குனர் கிருஷ்ணா, மருத்துவமனைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். கூடுதல் கட்டணம் வசூலித்த ஆறு மருத்துவமனைகளுக்கு நோட்டீஸ் வினியோகிக்கப்பட்டது.
மருத்துவ இணை இயக்குனர் கிருஷ்ணா கூறுகையில்,''தனியார் மருத்துவமனைகள் கட்டாயம் அரசு நிர்ணயித்துள்ள கட்டணங்களை மட்டுமே வசூலிக்கவேண்டும். விதிமுறை மீறும் மருத்துவமனைகள் மீது, தமிழ்நாடு மருத்துவ நிறுவனங்கள் சட்டம் - 1997ன் படி நடவடிக்கை மேற்கொண்டு, உரிமம் ரத்து செய்யப்படும்.மருத்துவமனைகளின் செயல்பாடு தொடர்ந்து கண்காணிக்கப்படும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X