பொது செய்தி

தமிழ்நாடு

நீட் தேர்வு பற்றி சூர்யா: டுவிட்டரில் ட்ரெண்டிங்

Updated : செப் 15, 2020 | Added : செப் 14, 2020 | கருத்துகள் (81)
Share
Advertisement
சென்னை: நீட் தேர்வுக் குறித்து நடிகர் சூர்யா தெரிவித்த கருத்து நீதிமன்றத்தை அவமதித்துவிட்டதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறும் நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு கடிதம் எழுதியிருந்தார். இந்த விவகாரம் தொடர்பாக சமூக வலைதளங்களில் பலரும் கருத்து வரும் நிலையில், சூர்யாவிற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலான ஹேஸ்டேக், இந்திய அளவில்
TNStandWithSuriya, நீட்என்ற_மனுநீதிதேர்வு, சூர்யா, டிரண்டிங், டுவிட்டர்

சென்னை: நீட் தேர்வுக் குறித்து நடிகர் சூர்யா தெரிவித்த கருத்து நீதிமன்றத்தை அவமதித்துவிட்டதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறும் நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு கடிதம் எழுதியிருந்தார். இந்த விவகாரம் தொடர்பாக சமூக வலைதளங்களில் பலரும் கருத்து வரும் நிலையில், சூர்யாவிற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலான ஹேஸ்டேக், இந்திய அளவில் டிரண்டானது.

நாடு முழுவதும் நேற்று (செப்.,13) நீட் தேர்வு நடைபெற்றது. பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில், நீட் தேர்வு நடந்து முடிந்தது. இந்நிலையில், நீட் தேர்வு குறித்து நடிகர் சூர்யா வெளியிட்ட அறிக்கையில், ‛நம் பிள்ளைகளின் தகுதியையும், திறனையும் வெறும் தேர்வுகள் தீர்மானிக்க அனுமதிக்கக்கூடாது, இனி பெற்றோர்களும், ஆசிரியர்களும் விழிப்புடன் இருக்க வேண்டும்' எனவும், ‛நீட் போன்ற மனுநீதி தேர்வுகள் எங்கள் மாணவர்களின் வாய்ப்புகளை மட்டுமின்றி உயிர்களையும் பறிக்கிறது' என்றும், ‛கொரோனா அச்சத்தால் உயிருக்கு பயந்து வீடியோ கான்பிரன்ஸிங் மூலம் நீதி வழங்கும் நீதிமன்றம், மாணவர்களை அச்சமில்லாமல் போய் தேர்வு எழுத வேண்டும் என்று உத்தரவிடுகிறது' எனவும் குறிப்பிட்டிருந்தார்.


latest tamil news


இந்த நிலையில், சூர்யாவின் அறிக்கையில் நீதிமன்றத்தின் செயல்பாட்டை விமர்சித்துள்ளதாக கூறி, சென்னை உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டுமென்று கோரி நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், தலைமை நீதிபதி சாஹிக்கு கடிதம் எழுதினார். அதில், ‛என்னுடைய கருத்துப்படி, அந்த அறிக்கையானது நீதிபதிகளின் ஒருமைப்பாடு மற்றும் ஈடுபாட்டையும், நமது நாட்டின் நீதிமன்ற கட்டமைப்பையும் குறைமதிப்புக்கு உட்படுத்தும் வகையில் மட்டுமின்றி அதை தவறான முறையில் விமர்சித்துள்ளதால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடரலாம்,' எனக் குறிப்பிட்டிருந்தார்.


latest tamil news


இந்த விவகாரம் தொடர்பாக சமூக வலைதளங்களில் பலரும் தங்கள் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். சூர்யாவின் கருத்துக்கு ஆதரவாகவும் எதிராகவும் அனல் பறக்கும் விவாதங்கள் டுவிட்டரில் நடந்து வருகின்றன. எனவே சூர்யாவின் கருத்து டிரண்டிங் ஆகி உள்ளது. டுவிட்டரில் TNStandWithSuriya, நீட்என்ற_மனுநீதிதேர்வு, போன்ற ஹேஸ்டேக்குகள் டுவிட்டரில் டிரண்டாகியுள்ளது.

இது குறித்து ஒரு கல்வியாளர் கூறும்போது, ‛நீட் தேர்வு நீதிமன்ற உத்தரவுபடி தான் நடத்தப்படுகிறது. இதில், மத்திய அரசுக்கு, எந்த சம்பந்தமும் இல்லை, மாணவர்களின் அறிவுத்திறனை சோதிப்பது தான் நீட் தேர்வின் நோக்கம். திறமையான மாணவர்களுக்கு வாய்ப்பு கிடைக்காமல் போய்விடக்கூடாது என்பதற்காக தான், நீட் தேர்வு நடத்தப்படுகிறது. இதை புரிந்துக்கொள்ளாமல், சில நடிகர்களும், நெட்டிசன்களும் கருத்து தெரிவிப்பது, அவர்களுக்கு விழிப்புணர்வு இல்லை என்பதையே காட்டுகிறது,' எனக் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (81)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
16-செப்-202011:59:42 IST Report Abuse
skv srinivasankrishnaveni தமிழ்நாடுத் தவிர வேறுஎந்த மாநிலமும் நீட் தேர்வுக்கு நோ சொல்லலீங்களே எதனால் அங்கே எல்லாம் இவ்ளோ தானியார் காசுபிடுங்கி பிள்ளைகள் இல்லியா எல்லாம் அரசின் பள்ளிகளா ஆர் எல்லோருமே டாக்டர் படிக்கவிரும்பலியா( என்னாத்துக்கு உசுரோட வெளையாட்டுன்னு) இவ்ளோபெரு சேர்ந்து எல்லோருமே டாக்டரால் ஆயிட்டால் நம்ம நாந்துலே எவ்ளோகிராமங்கள் இருக்கோ எல்லா இடத்துலேயும் MBBS சிறப்பாக படிச்சு தெரியவர்களேதான் டாக்டர்களாக இருப்பாங்களா ஆஹா எவ்ளோ நன்னாயிருக்கும் கேக்கலவே சந்ஷமாயிருக்கே ஆனாலிப்போதும் பல பாட்டிகள் சுக்கு மிளகு வேப்பைலை வசம்பு கடுக்காய் என்று கைவைத்தியம் பண்ணியே குணம் செய்ரறாங்க
Rate this:
Cancel
15-செப்-202019:12:43 IST Report Abuse
234 லட்சியம்   180 நிச்சயம்  வெற்றி ஜல்லிக்கட்டு தடை சட்டமும் காங்கிரஸ் ஆட்சியில் தான் நிறைவேற்றப்பட்டது. ஆனால் ஜெயா முதல்வராக இருந்தவரை அதனை எதிர்த்து செயல்படாமல் இருந்த அரசு OPS முதல்வராக இருந்தபோது மத்திய அமைச்சர்களிடம் வாதாடி முறியடித்து ஜல்லிக்கட்டு இப்போது நடை பெற்று கொண்டிருக்கிறது. 2017 ல் NEET தமிழகத்தில் கொண்டுவரும்போது உங்களிடம் இருந்த எம் பிக்கள் ஏன் அதனை தடுக்க முடியவில்லை. இவ்வளவுக்கும் காரணமான நீங்கள் 2017 ல் NEET ஐ நடத்த அனுமதித்து விட்டு திமுகவை குறை சொல்ல தகுதி உள்ளதா என யோசியுங்கள்.
Rate this:
Cancel
கொக்கி குமாரு - கோபால்புரம் தட்டை, உலகம் உருண்டை,,கோகாஸ் கில்லிங் இஸ்.
15-செப்-202018:59:43 IST Report Abuse
கொக்கி குமாரு அதுல பாருங்க, இங்கு வந்து சூர்யா அண்ணாவுக்கு ஆதரவா பதிவு போடும் வாசகர்கள் வீட்டில் ஒரு குழந்தை கூட அரசு பள்ளிகளில் படிக்காது. எல்லோரும் தரமான CBSE பள்ளிகளில் படித்துக்கொண்டு ஹிந்தியும் படிக்கும். அந்த வாசகர்களில் ஒருவராவது அரசு பள்ளிகளிலும் எங்கள் குழந்தை படிக்கும் கல்வியையும், எங்கள் குழந்தை படிக்கும் ஹிந்தியையும் கற்றுக்கொடுங்கள் என்று கேட்கிறார்களா? இல்லை. பிறகு எதற்கு சூர்யா அண்ணாவிற்கு ஆதரவாக வருகிறார்கள். அவர்களின் பின்புலத்தை ஆராய்ந்தால் அவர்கள் தலைமுறை குடும்ப கொத்தடிமை கழக உடன்பிறப்புகளாக இருப்பார்கள். இவர்கள் இருக்கும் வரையில் சுடலை மற்றும் உதைணாவை யாராலும் அசைக்க முடியாது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X