பொது செய்தி

தமிழ்நாடு

சமூக இடைவெளி கடைப்பிடிக்காத கடைக்கு 'சீல்'

Added : செப் 14, 2020
Share
Advertisement

நாமக்கல்: கொரோனா பரவலை கட்டுப்படுத்த, வரும், 30 வரை ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. மக்கள் முக கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். கிருமி நாசினி பயன்படுத்த வேண்டும் என, அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், ஆர்.டி.ஓ., கோட்டைக்குமார் தலைமையில், தாசில்தார் பச்சைமுத்து, நகராட்சி கமிஷனர் பொன்னம்பலம் ஆகியோர், நாமக்கல் நகராட்சியில், ஒவ்வொரு பகுதியாக சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, தட்டார தெருவில் செயல்படும், ஆட்டோ மொபைல்ஸ் கடையில், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல், வாடிக்கையாளர்கள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, கடைக்கு அதிகாரிகள் 'சீல்' வைத்தனர். சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத, பிரியாணி கடைக்கு, 7,000 ரூபாய், முக கவசம் அணியாமல் பணியாற்றிய கடைக்கு, 2,000 ரூபாய் அபராதம் விதித்து வசூல் செய்யப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X