பொது செய்தி

தமிழ்நாடு

நீட் தேர்வு ரத்து செய்ய கோரி தி.கோட்டில் ஆர்ப்பாட்டம்

Added : செப் 14, 2020
Share
Advertisement

திருச்செங்கோடு: திருச்செங்கோட்டில், பழைய பஸ்நிலையம் அண்ணா சிலை அருகில். நேற்று காலை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம் சார்பில், நீட் தேர்வு பயம் காரணமாக தற்கொலை செய்து கொண்ட மாணவன் மோதிலால் குடும்பத்திற்கு, உதவி வழங்க கேட்டு ஆர்ப்பாட்டம் நடந்தது. வாலிபர் சங்க மாவட்ட தலைவர் கோவிந்தராஜ் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர்கள் சரவணன், செயலாளர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில தலைவர் கண்ணன், மாநில துணை செயலாளர் பாலச்சந்திரபோஸ் ஆகியோர் பேசினர். நீட் தேர்வால் உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்திற்கு, அரசு வேலை வழங்கவேண்டும். உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்திற்கு, 50 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கவேண்டும் என்று வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது.

* இதேபோல், தமிழ் புலிகள் கட்சி சார்பில், நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் கார்த்தி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X