தமிழ்நாடு

நாமக்கல் மாவட்டத்தில் 9 மையங்களில் 'நீட்' தேர்வு: 4,200 மாணவர்கள் பங்கேற்பு: 639 பேர் 'ஆப்சென்ட்'

Added : செப் 14, 2020
Share
Advertisement

நாமக்கல்: மருத்துவக் கல்லூரி சேர்க்கைக்கான நீட் நுழைவுத் தேர்வு, நாமக்கல் மாவட்டத்தில், ஒன்பது மையங்களில், 4,200 பேர் பங்கேற்ற நிலையில், 639 பேர் கலந்து கொள்ளவில்லை.


இந்தியா முழுவதும், மருத்துவக் கல்லூரியில், எம்.பி.பி.எஸ்., சேர்க்கை பெறுவதற்கான, நீட் நுழைவுத் தேர்வு நேற்று நடந்தது. இரண்டு ஆண்டுகளுக்கு முன், சி.பி.எஸ்.இ., வாரியம் மூலம் நடத்தப்பட்ட இத்தேர்வு, தற்போது, தேசிய தேர்வு ஏஜென்சி மூலம் நடத்தப்படுகிறது. நாமக்கல் மாவட்டத்தில், நீட் தேர்வு எழுதுவதற்காக, 4,839 மாணவ, மாணவியர் விண்ணப்பித்திருந்தனர். அவர்கள் அனைவருக்கும் ஹால் டிக்கெட் அனுப்பி வைக்கப்பட்டது. நீட் தேர்வுக்காக மாவட்டத்தில், ஒன்பது மையங்கள் தேர்வு செய்யப்பட்டிருந்தன. குமாரபாளையம் ராயல் இன்டர்நேஷனல் பள்ளி, பாச்சல் பாவை பொறியியல் கல்லூரி, நாமக்கல் செல்வம் கலை அறிவியல் கல்லூரி, திருச்செங்கோடு கே.எஸ்.ஆர்., அக்சரா அகாடமி, கீரம்பூர் நவோதயா அகாடமி, நாமக்கல் டிரினிடி அகாடமி, ஸ்பெக்ட்ரம் லைப் பள்ளி, நேஷனல் பப்ளிக் பள்ளி, பரமத்தி பி.ஜி.பி., பாலிடெக்னிக் கல்லூரி ஆகிய மையங்களில் தேர்வு நடந்தது. உள்ளாட்சி அமைப்புகள் மூலம், தேர்வு மையங்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. நீட் தேர்வுக்கு, முக கவசம் அணிந்து, ஹால் டிக்கெட்டுடன் வந்த மாணவர்கள், தீவிர சோதனைகளுக்கு பின்னரே, மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். உள்ளே நுழைந்த மாணவ, மாணவியருக்கு சானிடைசர் வழங்கப்பட்டது. காலை, 10:00 மணி முதல், மாணவ, மாணவியர் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். பகல், 1:30 மணி வரை தேர்வர்கள் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். பகல், 2:00 மணிக்கு தேர்வு துவங்கி, மாலை, 5:00 மணி வரை நடந்தது. அதில், 4,200 மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். 639 பேர் கலந்து கொள்ளவில்லை. நீட் தேர்வையொட்டி, நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு, குமாரபாளையம், ப.வேலூர் உள்ளிட்ட இடங்களில் இருந்து, தேர்வு மையங்களுக்கு, சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X