பாசனத்திற்கு செல்லும் தண்ணீரில் கழிவுநீர் கலப்பு

Added : செப் 14, 2020
Share
Advertisement

பள்ளிபாளையம்: பள்ளிபாளையம் பகுதியில், பாசனத்திற்கு செல்லும் தண்ணீரில், கழவுநீர் கலப்பதால் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேட்டூர் கிழக்குகரை வாய்க்காலில், தற்போது நெல்சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி, பள்ளிபாளையம் வட்டாரத்தில், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். தெற்குபாளையம், ஈ - காட்டூர், சின்னகவுண்டம்பாளையம், எலந்தகுட்டை, காந்திபுரம் மற்றும் பல பகுதிகளில் வாய்க்கால் அருகே குடியிருப்புகள் உள்ளன. இதிலிருந்து வெளியேறும் கழிவுநீர், பாசனத்திற்கு செல்லும் தண்ணீருடன் கலந்து வருகிறது. இது சாகுபடிக்கு செல்லும் போது, பாதிப்பு ஏற்படுகிறது. எனவே பொதுப்பணித்துறை அதிகாரிகள், ஆய்வு செய்து கழிவுநீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X