பொது செய்தி

தமிழ்நாடு

காவிரியை தூய்மைப்படுத்தும் பணி; தன்னார்வலர்கள் ஈடுபட்டதால் வரவேற்பு

Added : செப் 14, 2020
Share
Advertisement

ப.வேலூர்: ப.வேலூர், காசி விஸ்வநாதர் காவிரிக்கரையில், காவிரி தூய்மை பணி தன்னார்வலர்கள், டவுன் பஞ்., நிர்வாகத்தினர் மற்றும் பொதுமக்கள், தூய்மை பணியில் ஈடுபட்டு வருவது வரவேற்பை பெற்றுள்ளது.


நாமக்கல் மாவட்டம், ப.வேலூரில் காசிவிஸ்வநாதர் கோவில் காவிரிக்கரை உள்ளது. இந்த காசி விஸ்வநாதர் காவிரி கரையில், கோவில் கும்பாபிஷேகத்திற்கு புனித தீர்த்தம் எடுப்பவர்கள், முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்பவர்கள் மற்றும் ஈமக்காரியங்கள் செய்ய வருவோரின் எண்ணிக்கை அதிகளவில் உள்ளது. தற்போது, காவிரிக்கரை முழுவதும் மாசடைந்தும், காவிரியில் துணிகளை போட்டும், பிளாஸ்டிக் பொருட்களை வீசியும் செல்கின்றனர். மதுபிரியர்கள் சிலர் இரவு நேரத்தில், காவிரி கரையோரத்தில் மது அருந்திவிட்டு, பாட்டில்களை வீசி செல்கின்றனர். இதையடுத்து, இளைஞர்கள் பலர் ஒன்று கூடி, காவிரி தூய்மை பணி தன்னார்வலர்கள் என்ற குழுவை தொடங்கி, காசி விஸ்வநாதர் ஆலய காவிரி கரையை தூய்மைபடுத்துவதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர். இந்நிலையில் காவிரி தூய்மை பணி தன்னார்வலர் குழுவினர், டவுன் பஞ்., நிர்வாகத்தினர், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் ஒன்றிணைந்து இரண்டு பொக்லைன் இயந்திரம் மூலம், காவிரியாற்றை தூய்மை படுத்தும் பணியில் நேற்று ஈடுபட்டனர். பொதுமக்களில் சிலர், தூய்மை பணியில் ஈடுபட்டவர்களுக்கு முக கவசம், கையுறை, தேநீர் மற்றும் உணவு வழங்கினர். தூய்மைபடுத்தப்பட்ட பகுதிகளில் சரக்கொன்றை, வாகை, வேப்பமரம், பூவரசன், வன்னி உள்ளிட்ட மரங்களின் விதைப்பந்துகளை வீசினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X