பொது செய்தி

தமிழ்நாடு

கிணறுகளில் உயரும் தண்ணீர் மட்டம்

Added : செப் 14, 2020
Share
Advertisement

பள்ளிபாளையம்: பள்ளிபாளையத்தில் தொடர் மழையால், வறண்டு போன கிணறு, நீர்நிலைகளில் மேல்மட்ட நிலப்பரப்பு வரை தண்ணீர் அதிகரித்து காணப்படுகிறது. பள்ளிபாளையம் பகுதியில், கடந்த கோடைகாலத்தில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விட்டதால், ஐந்து மாதங்களாக கிணறு, ஏரி, ஓடை போன்ற நீர்நிலைகள் வறண்டிருந்தன. இதனால் நிலத்தடி நீரை பயன்படுத்தி, சாகுபடி செய்யும் விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். பல இடங்களில் போர்வெல்களில் தண்ணீர் இல்லாததால், குடிநீர் பற்றாக்குறையும் ஏற்பட்டது. இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக, தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால், நிலத்தடி நீர்மட்டம் அதிகரித்து வருகிறது. இதனால் வறண்டு போன நீர்நிலைகளில் தண்ணீர் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, கிணறுகளின் மேல்பரப்பு நிலமட்டளவுக்கு தண்ணீர் அதிகரித்து விட்டது. கையிலேயே எடுக்குமளவுக்கு தண்ணீர் நிரம்பியுள்ளது. இதனால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X