பொது செய்தி

தமிழ்நாடு

124 பேருக்கு கொரோனா தொற்று; பாதிப்பு 3,344 ஆக அதிகரிப்பு

Added : செப் 14, 2020
Share
Advertisement

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில், நேற்று ஒரே நாளில், 124 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, 3,344 ஆக உயர்ந்துள்ளது.


நாமக்கல் மாவட்டத்தில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இது, மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், நேற்று நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல், ராசிபுரம், பள்ளிபாளையம், குமார பாளையம், திருச்செங்கோடு, குமாரமங்கலம், ப.வேலூர், புதுச்சத்திரம், சேந்தமங்கலம், குருசாமிபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த, 124 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். நாமக்கல், சேந்தமங்கலம், ராசிபுரம், திருச்செங்கோடு, குமாரபாளையம் அரசு மருத்துவமனைகளிலும், தனியார் மருத்துவமனைகளிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று சிகிச்சை குணமடைந்து, 50 பேர் மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதுவரை, 2,382 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 50 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது, 912 பேர் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு, தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X