சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சாக்கடையில் டிரைவர் சடலம் மீட்பு

Added : செப் 14, 2020
Share
Advertisement

மோகனூர்: மோகனூர், ப.வேலூர் சாலை கிராயூர் பஸ் நிறுத்தம் அருகே உள்ள, கழிவு நீர் சாக்கடையில், நேற்று முன்தினம் மாலை, ஆண் சடலம் கிடந்துள்ளது. இது குறித்து, வி.ஏ.ஓ., ஸ்ரீபால் மோகனூர் போலீசில் புகார் செய்தார். இதையடுத்து, போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக, நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் யார், எந்த ஊர் என்பது குறித்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும், அவரது படம் வாட்ஸ் ஆப்பில் பதிவு செய்யப்பட்டது. அதன் மூலம், அவர் யார் என்பது குறித்து அடையாளம் தெரிந்தது. அவர், பரமத்தி அருகே கீழ்சாத்தம்பூர், செல்லாண்டியம்மன் கோவில் அருகே வசிக்கும் நவலடி, 48, என்பதும், லாரி டிரைவர் என்பதும் தெரியவந்தது. அவர், எப்படி இறந்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X