கேரள மா.கம்யூ., கட்சி ஆபீசில் பெண் தற்கொலை: நெட்டிசன்கள் கொந்தளிப்பு

Updated : செப் 14, 2020 | Added : செப் 14, 2020 | கருத்துகள் (28)
Share
Advertisement

திருவனந்தபுரம்: கேரளாவில் பினராய் விஜயன் தலைமையிலான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசு செயல்பட்டு வருகிறது. இன்னும், ஏழு மாதங்களில் தேர்தலைச் சந்திக்க இருக்கும் கேரளாவில், ஆளும் கட்சியும், எதிர்க் கட்சிகளும் கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர் கொண்ட கூட்டங்களைக் கிளைகள் வாரியாக நடத்தி வருகின்றன. அந்த வகையில் கட்சி கூட்டத்துக்குச் சென்ற மா.கம்யூ., பெண் உறுப்பினர் கட்சி அலுவலகத்துக்குள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.latest tamil news
திருவனந்தபுரம் பாறசாலை அழகிகோணத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீகுமார். இவருடைய மனைவி ஆஷா, 41; மா.கம்யூ., கட்சியில், 15 ஆண்டு உறுப்பினர். மேலும் பாறசாலை ஏரியா கமிட்டியில் கட்சிப் பணிகளை மேற்கொண்டு வந்தார். கடந்த 10ம் தேதி பாறசாலை கட்சி அலுவலகத்தில் நடந்த கமிட்டி கூட்டத்தில் கலந்து கொண்ட ஆஷா இரவு வரை வீடு திரும்பவில்லை. அவருடைய கணவர் கட்சி அலுவலகம் வந்து விசாரித்து விட்டு உறவினர்கள் வீடுகளிலும் சென்று விசாரித்துள்ளார்.

இந்த நிலையில் பாறசாலையில் திறப்புவிழா காணாத கட்சி அலுவலக கட்டடத்தில் ஆஷா தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். அங்கு கிடந்த கடிதத்தில், 'கட்சியின் கிளைச் செயலாளர் அஸ்தன் ஜாய் மற்றும் கட்டமண்ராஜன் இருவரும் தொடர்ந்து 'டார்ச்சர்' தந்தனர். இது தொடர்பாக கட்சி மேல்மட்ட தலைவர்களுக்கு புகார் அனுப்பியும் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. இன்று (செப்., 10) நடந்த கட்சி கூட்டத்திலும் என்னை தவறாக பேசியதால் தற்கொலை செய்து கொள்கிறேன்' என, எழுதியிருந்தார்.
இது கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் அங்கு பொதுமக்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.


latest tamil news'கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கட்சி நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது அதற்குத் தேவையான ஆதாரங்கள் இல்லை' என, போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சி தலைவர் காங்., ரமேஷ் சென்னிதலா கூறுகையில், ''கம்யூனிஸ்ட் கட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதை, பல சம்பவங்கள் உணர்த்தியுள்ளன. இதில் தொடர்புடைய கம்யூனிஸ்ட்களை உடனடியாக கைது செய்ய வேண்டும். மேலும் நேர்மையான ஒரு டி.ஜி.பி.,யை கொண்டு விசாரணை நடத்த வேண்டும்,'' என்றார்.
இந்த சம்பவம் குறித்து கேள்வி எழுப்பாமல் மவுனமாகவுள்ள கேரள பெண்ணியவாதிகள், நடுநிலை ஊடகவியலாளர்கள் எனக் கூறிக்கொள்பவர்களை சமூக ஆர்வலர்கள் கடுமையாக சாடி வருகின்றனர். 'இதுவே பா.ஜ., ஆளும் மாநிலங்களில் நடந்திருந்தால், இந்த ஊடகத்தினர், நடுநிலையாளர் எனக் கூறிக் கொள்பவர்கள், எப்போதும் சமூக வலைத்தளங்களில் வாழ்க்கை நடத்தும் நெட்டிசன்கள் சும்மா இருந்திருப்பார்களா. கம்யூனிஸ்ட் ஆளும் மாநிலத்தில் ஒரு நீதி, மற்ற மாநிலத்தில் வேறு நீதியா' என, ஒரு மூத்த பத்திரிக்கையாளர் கேள்வி எழுப்பினார்.

Advertisement
வாசகர் கருத்து (28)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Gurumoorthy Padmanaban - chennai,இந்தியா
15-செப்-202008:07:56 IST Report Abuse
Gurumoorthy Padmanaban இப்போ நான் நடிகர் சூர்யா விடம் ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன். நீட் தேர்வு எழுத பயந்து தற்கொலை செய்து கொண்டதால் நீட் தேர்வை தடை செய்ய சொன்னேர்களே இப்போ மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை தடை செய்ய சொல்லி அறிக்கை விட உங்களுக்கு நெஞ்சுரம் இருக்கிறதா????
Rate this:
madhavan rajan - trichy,இந்தியா
15-செப்-202020:11:38 IST Report Abuse
madhavan rajanஅதற்கும் சில லட்சங்கள் அளித்தால் நிச்சயம் அதுபோல அறிக்கை விடுவார். லட்சங்களை வாங்கி அறிக்கை விடுபவரிடம் லட்சியங்களை எதிர்பார்க்கலாமா?...
Rate this:
Cancel
natarajan s - chennai,இந்தியா
15-செப்-202007:29:08 IST Report Abuse
natarajan s உலக அளவில் கம்யூனிசம் தோற்று பல காலம் ஆகிவிட்டது . எல்லோரும் CAPITALISM நோக்கி நகர ஆரம்பித்து விட்டார்கள் , இதனால்தான் தொழில் முன்னேற்றம், வேலை வாய்ப்பு எல்லாம் ஏற்படும் என்று தெரிந்துவிட்டது. இன்னும் சோசலிசம் பேசி இருக்கும் தொழில் நிறுவனகளை மூட (இவர்கள் வந்தால் சீக்கிரம் மூடு விழாதான் ) யாரும் தயாராகவில்லை. மதுரை அருகில் ஒரு பஞ்சாலை நிறுவனம் மூத்த கம்யூனிஸ்ட் கட்சி தோழரின் சகோதரர் நடத்தினார் அங்கு தொழில் சங்கம் கிடையாது (தற்போது அந்த மில் இயங்கவில்லை ) அதுபற்றி கேள்வி கேட்டாலே அந்த தலைவருக்கு பிடிக்காது என்னை எதற்கு கேட்கிறீர்கள், அங்கு எல்லா வசதியும் செய்ய பட்டு உள்ளதால் தொழில் சங்கம் தேவை இல்லை என்று தொழிலாளர்கள் முடிவு செய்து இருப்பார்கள் என்று பதில் கூறினார். இதுதான் இவர்களது நிலைப்பாடு.
Rate this:
Cancel
Siva Kumar - chennai,இந்தியா
15-செப்-202005:32:36 IST Report Abuse
Siva Kumar கம்யூனிஸ்டுகள் காசுக்காக மாரடிப்பவர்கள். இவர்களை நம்பி எத்தனை குடும்பங்கள் சாவை நோக்கி சென்றுள்ளன என்பதை வரலாறு உரைக்கும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X